Sunday, 10 March 2019

தொல்காப்பியர் சூழியல் பூங்கா ஒரு பயணம் 9/03/2019


தொல்காப்பியர் சூழியல் பூங்கா ஒரு பயணம் 9/03/2019

முன்னுரை :-

இப்படி ஒரு சூழியல் பூங்கா சென்னைக்கு நடுவில் இருப்பது இன்னும் பலருக்கு தெரியாது. மிகவும் அருமையான இடம் 59 ஏக்கர் நிலத்தில் அமைந்த  பசுமை மாற வெப்பமண்டல காடு, முற்றிலும் மனிதனால் உருவாக்கப்பட்டது. சென்னை மலையேற்ற குழுமூலம் 9/03/2019 நாளன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சூழியல் பூங்கா பார்வையிடல் பயணத்தில் நான் பெற்ற எனது அனுபவங்களின் சிறு தொகுப்பே இந்த கட்டுரை.

பொருளுரை:-
சென்னை மலையேற்ற குழு மூலம் ஹேமா மணி  இந்த வாய்ப்பை பகிர்ந்திருந்தார்.

நான் இந்த வாய்ப்பை கண்டதும் உடனே பதிவு செய்துவிட்டேன். ஆனால் எனக்கு இந்த பூங்கா பற்றியும் என்ன பார்க்க போகிறோம் என்பது பற்றியும் ஒன்றுமே தெரியாது. இந்த பூங்கா அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இங்கு பார்வையாளர்களை ஆதிக்கம் அனுபதிப்பது இல்லை. இணைய முன்பதிவின் அடிப்படையில் அனுமதிக்கிறார்கள்.

வரம் 3 நாட்கள் அனுமதி உண்டு. நுழைவுசீட்டின் விலை 20 ரூபாய் .
முன்பதிர்விற்கு - http://www.chennairivers.gov.in/
செவ்வாய்க்கிழமை - 2:30 PM - 4:30 PM
வியாழக்கிழமை - 2:30 PM - 4:30 PM
சனிக்கிழமை - 10.30 AM - 12.30PM மற்றும் 2:30 PM - 4:30 PM

ஒரு நாளைக்கு 60 பேர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த பயணத்திற்கு என்னைப்போலவே நிறையபேர் பதிவு செய்திருந்தமையால் ஹேமா 20 பேர் கொண்ட 5 குழுக்களாக பிரித்து 5 வாரங்கள் முன்பதிவு செய்திருந்தார். நான் 4வது வாரத்தில் இடம்பெற்றிருந்த குழுவில் இருந்தேன். மின்னஞ்சலில் வந்த தகவல்களின் அடிப்படையில் நான் சரியாக 9/03/2019 நாளன்று மதியம் 2.30க்கு தொல்காப்பியர் பூங்காவை வந்தடைந்தேன். ஆனால் பூங்காவிற்கு ஒரு பெயர் பலகை கூட இல்லை வெளியில் இருந்து பார்த்தால் சரியாக பராமரிக்காதது போல தோன்றும்.

பூங்காவினுள் நுழைந்தவுடன் எங்கள் குழுவில் உள்ளவர்கள் ஹேமாவுடன் மரநிழலில் அமர்ந்திருந்தனர் மற்ற குழு உறுப்பினர்களின் வருகையை நோக்கி. அனைவரும் வந்தபின்பு நுழைவுசீட்டிற்க்கான பணம் வசூல் செய்யப்பட்டு ஹேமாவால் நுழைவு சீட்டு வாங்கப்பட்டது.

மகேஸ்வரன் (சுற்றுச்சூழல் கல்வியாளர்) எங்களுக்கு பூங்காவை பற்றி விளக்கி கூற எங்களுடன் வந்தார். அவர் இந்த பூங்கா உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்திருக்கிறார். 2008 ஆம் ஆண்டுக்கு முன்பு குப்பை மேடுகளாக இருந்த இந்த இடத்தை முழுவதும் சுத்தம் செய்து வாய்க்கால்களை தூர்வாரி வளமற்ற மண்ணை அகற்றிவிட்டு நல்ல வளமான மண்ணை ஆரோவில்லில் இருந்து கொண்டுவரப்பட்டு இங்கு கொட்டி செடிவைக்கப்பட்டது .

2014 ஆம் ஆண்டிலிருந்து பொதுமக்கள் பார்வைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.

இங்கு 600 வகையான நாட்டு மரங்கள்/செடிகள்/கொடிகள்/புதர்கள் ஆகியவை நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

இங்கிருந்து எடுக்கப்பட்ட மண்ணில் புது முறையில் செங்கல் தயாரிக்கப்பட்டு இங்கு ஒரு கட்டிடம் கட்டி இருக்கிறார்கள். இந்த கட்டிடத்தில் இங்கு வரும் பார்வையாளர்களுக்கான கருத்து பட்டறை நடத்துவதற்காக  உபயோகிக்கிறார்கள்.

மகேஸ்வரன் நமது சென்னையை சுற்றி இருக்கும் ஆறுகளையும் மற்றும் நீர்நிலைகளும் நமக்கான நீராதாரங்களை பற்றி நன்கு புரியும்படி விளக்கி கூறினார்.

பூங்காவின்  வேலியோரம் நன்கு மண் குவிக்கப்பட்டு புதர்ச்செடி மண்டி வளரும் அளவிற்கு அமைத்திருந்தனர். ஏன் இவ்வாறு இருக்கிறது என்று கேட்டபொழுது இவ்வாரான புதர் செடிகள் அருகில் இருக்கும் சாலையில் இருந்து வரும் இரைச்சலை வடிகட்டி அமைதியான சூழலை தரும் என்பதற்காக இந்த அமைப்பை ஏற்படுத்தியதாக விளக்கினார்.

மேலும் நிறைய மனித நடமாட்டம் இருந்தால் பறவைகளுக்கு அது இடையூறாக இருக்கும் அதனால் தான் பெயர் பலகை கூட இன்னும் வைக்காமல் இருக்கிறோம் என்றார்.

பூங்காவின் நடுவே ஏரிகளும் சிறு சிறு தீவுகளும் இருந்தன. பறவைகள் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்வதை யாரும் தொந்தரவு செய்துவிட கூடாது என்பதற்க்காக இந்த அமைப்பு.


நாங்கள் சென்றிருந்த நேரத்தில் எங்களால் 5திற்கும் மேற்பட்ட பறவைகளை பார்க்க முடிந்தது அந்த ஏரியில்.


பிறகு அடையாறு ஆற்றில் இருந்து வரும் சாக்கடை நீர் இந்த ஏரியில் புகாமல் தடுக்க இங்கு மேற்கொள்ளப்பட்ட செயல்முறைகளை விளக்கினார். அலையாத்தி என்ற செடிவகையை நட்டு சாக்கடை/கடல்  நீர் உட்புகாதவாறு பாதுகாக்கிறார்கள். இந்த அலையாத்தி செடி உப்பு நீரிலும் நன்கு வளரக்கூடியது. உப்பு நீரை தனக்குள் உறிஞ்சி உப்பைமட்டும் தனது இலையில் அடிபகுதியில் வெளியேற்றிவிடும். மண்ணுக்கடியில் உப்பு நீர் இருப்பதால் தனது வேறை பூமிக்கு வெளியில் விட்டு சுவாசிக்கும். இந்த விடயங்கள் எனக்கு இதற்கு முன்புவரை தெரியாது. இதை அழகாக செடியில் அருகில் அமர்ந்து விலக்கிக் கூறினார்.
பூங்காவில் ஆங்காங்கே  கடப்பா கல்லில் விலங்குகள்/பூச்சிகள்/மீன்கள்/ ஆகியன பற்றிய அழகான வேலைப்பாடுகளை காண முடிந்தது.

சிறு சிறு ஓய்வுக்குடில்களும் ஆங்காங்கே இருந்தன. அழகான திறந்தவெளி கலையரங்கத்தையும் காண முடிந்தது. மிகவும் சிறிய அழகான கற்பாறைகளால் ஆனா திறந்தவெளி கலையரங்கம் அது.

முடிவுரை:-
எங்களுக்கு 2 மணி நேரம் போனதே தெரியவில்லை. 4.30PM  மணிக்கு வெளியில் வந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

இந்த சூழியல் பூங்காவை பற்றி நிறைய தெரிந்துகொள்ள மீண்டும் வருவதாக கூறி பிரியா விடைபெற்று அனைவரும் அங்கிருந்து கலைந்தோம்.


இந்த பயணம் சிறப்பாக அமைய ஒத்துழைப்பு நல்கிய அணைத்து நல்லுள்ளங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
பாலாஜி ஜோதிமணி
 Mobile: +91-9677549415
 Email: jbalajiavm@gmail.com
 Facebook: www.facebook.com/jbalajiavm

Thursday, 8 March 2018


CTC ஐந்திணை - குக்கூ  காட்டுப்பள்ளி  ஒரு பயணம் மார்ச் 18 & 19 2017

குக்கூ காட்டுப்பள்ளி

            நாங்கள் எங்கள் நீண்ட கால செயலினூடாக சென்று சேர விரும்பிய நிலம் செம்மண்ணோடு ஜவ்வாது மலை அடிவாரத்தில் தாவரங்கள் முளைத்து பூமி மீது படர்ந்திருக்கிறது. சமூகத்திற்கு வெளியேயும், கானகத்திற்கு உள்ளேயும் அழகாய் ஆங்காங்கே  சிறு சிறு  குடில்களாக  அமைந்திருக்கிறது குக்கூ காட்டுப்பள்ளி.

 

Jothi Photos 

கல்வி நல்சூழல் பறிக்கப்பட்ட குழந்தைகளின் அதிகாலையாகவும், மறக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட முதியவர்களுக்கான ஓய்விடமாகவும், தாலாட்டும் அந்தியாகவும் இந்நிலம் இருக்கிறது. அங்கே குழந்தைகள் களங்கமற்ற குதூகலத்தையும், முதியவர்கள் தங்கள் வாழ்வனுபவ ஞானத்தின் எல்லையின்மைகளை விரல் கோர்த்துக்கொள்ளலாம்...
இயற்கைக்கு விரோதமற்ற நிஜமான மனித தேவைகளுக்கான, மரபான தொழில்நுட்பங்கள், இயற்கை வழி நிரந்தர வேளாண்மை, காலத்திலிருந்து விடுபட்டு பன்முக பருவங்களின் வியாபித்தல்களை உணர்தல், இயற்கையை, சமூகத்தை, வாழ்வை கவனித்து கற்றல் மூலம் யாவர் காலடியில் இருந்தும் விழிப்புணர்வின் பாதை தோன்றும். சொல், எழுத்து, பொருள், தொழில் முழுமை ஆக்கம் இவை யாவும் கற்று இயற்கையில் தெளிதல் அதற்கான சிறு தொட்டில்தான் அந் நிலம்...
 இந்த பள்ளியின் கட்டுமானத்தில் எங்கள் பங்களிப்பை அளிப்பதற்கு நாங்கள் மேற்கொண்ட பயணமே இந்த பயண கட்டுரை.
 என் பிறந்த நாளில் இந்த மாதிரி ஒரு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்ததை என்னி மகிழ்ச்சியும் , பெருமிதமும் கொள்கிறேன்.

 

பயண தொடக்கம்

திட்டமிட்டபடி 22 பேர் கொண்ட எங்கள் குழு 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் சென்னையில் இருந்து முன்பதிவு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் கிளம்பியது.
அனைவரும் அவரவர் சந்திப்பு இடத்தில ஒன்றுகூடி வாகனத்திற்கு காத்திருந்தோம் , நண்பன் விக்னேஷ் அவரது தாயாருடன் வந்திருந்தார், தினேஷ் அவரது மனைவியுடன் வந்திருந்தார்.
மேனேஜர் சிவா எங்களை எல்லாம் சரியான நேரத்திற்கு வரசொல்லிவிட்டு அவர் 1 மணிநேரம் தாமதமாக வந்த காரணத்தால் கிளம்ப சற்று தாமதம் ஆனது.வண்டி கிளம்பியதும் அனைவரும் சிவாவை எவ்வளவு திட்ட வேண்டுமோ அவ்வளவு திட்டித்தீர்த்துவிட்டனர்.
பின்னர் அவரவர் கொண்டுவந்திருந்த சிற்றுண்டிகளை பரிமாறிக்கொண்டனர் .

வாகனம் சென்னையை விட்டு வெளியே சென்றதும் ஒரு பேய்ப்படம் போட்டார்கள். அதுவரை எனது அருகில் அமர்ந்து  லாப லாப என்று பேசிக்கொண்டு இருந்த கார்த்திகா சற்றே பீதி கலந்த அமைதியானார். கரணம் பேய்ப்படம். கார்த்திகாவின் வீக்னஸ் தெரிந்த பிறகு நம்ம பசங்க சும்மாவா விடுவாங்க. வச்சி செஞ்சி விட்டுட்டாங்க.

இரவு 10.30 மணியளவில் வேலூரில் இரவு உணவிற்க்காக வாகனம் நின்றது. ஒருகுழு அசைவ உணவகத்திருக்கும் மற்றொரு குழு சைவ உணவகத்திருக்கும் சென்றோம். நங்கள் சென்ற அசைவ உணவகத்தில் துவுமே இல்லை, ஏமாற்றத்துடன் மறுபடியும் நங்கள் சைவ உணவகத்திற்க்கே வந்து முன்சென்ற குழுவுடன் சேர்ந்துகொண்டோம். கோரிய உணவுகள் வரவர அனைவரும் பங்குபோட்டு ஒரே தட்டில் ஒருவழியாக சாப்பிட்டு முடித்துவிட்டு மறுபடியும் குக்கூ பள்ளி நோக்கி பயணக்க தொடங்கினோம் . இரவு 1.30 மணி அளவில் எங்கள் வாகனம் குக்கு பள்ளியை அடைந்தது.

நாங்கள் பள்ளியின் வாயிலை நெருக்கும் முன்பே அந்த  பள்ளியின் காவலர்கள் (நாய்கள்) ட்விங்கிள் , ஜோடான் , ஜாக் மற்றும் பாக்சி எங்களை ஓடிவந்து அன்போடு வரவேற்றன. எங்கள் குழுவில் 20 பேரும்  முதன்முறையாக இங்கு வருகிறோம் , ஆனாலும் அந்த ஜீவன்கள் எங்களை கண்டு குறைக்கவோ.  கடிக்கவோ நினைக்கவில்லை. எங்கள் ஒவ்வொருவரின் அருகில் வந்து எங்கள் மீது அதன் முனகிக்கால்களை வைத்து மகிழ்ச்சியுடன் வரவேற்றன.

பள்ளியினுள் சென்றயுடனே எங்களுக்கு இரவு தூங்க பள்ளியின் நூலகம் தரப்பட்டது. நங்கள் அனைவரும் நன்கு உறங்கி அதிகாலையில் எழுந்தோம் .


நாள் ஒன்று - வேலைகள் 18 மார்ச் , 2017

தூக்கம் மலர்ந்து நினைவுகளில் அதிகாலைக் குளிர் படரும் தருணத்தில் காதில் விழும் குயிலின் கூவல், உலர்ந்த உணர்வில் மழை தெளித்து, மனதில் ஏக்கத்தின் வாசனை கிளப்பும். கைகள் தேய்த்து கண்களில் பொத்தி மொத்தமாக விழிக்கையில் நரம்புகள் சோம்பல் முறிக்கும். வெற்றுக் காலில் நடக்க நடக்க மண்ணும் சிறு கற்களும் உதிர் இலைகளும் உள்ளங்காலில் கிறுக்கும் அழகு! ஹைய்யோ... நினைத்தாலே ஜில்லென இருக்கிறது.
காலையில் பள்ளியில் இருந்த பட்டியம்மா எங்களுக்கு கருப்பட்டி மூலிகை தேனீர் வைத்து கொடுத்தாதிர்கள்.


பிறகு பள்ளியின் எதிரில் இருக்கும் ஒரு பெரிய புளிய மரத்தின் அடியில் அனைவரையும் கூட்டி அமரவைத்து சிவராஜ் அண்ணா அவர்கள் இந்த பள்ளியையும் அவர்கள் பின்பற்றும் பழக்க வழக்கங்களையும்  எங்களுக்கு புரியும்படி கூறினார். அருகில் இருக்கும் மலை கிராமங்கள் பற்றியும் கூறினார்.பிறகு நங்கள் எங்கள் பணிகளை தொடர ஆரம்பித்தோம் . மழை நீர் செல்வதற்கு தோண்டப்பட்ட கால்வாய்களின் விளிம்பில் அங்கு கிடந்த பாறைகளை ஒரே சீராக 
அடிக்கினோம்.

அந்த வேலை முடிந்தாயுடன் காலை உணவிற்காக கேழ்வரகு கூழ் மற்றும் மங்கை ஊறுகாய் தயார் செய்யப்பட்டு இருந்தது.காலை உணவை ஒரு பிடி பிடித்துவிட்டு அங்கு நடப்பட்டு இருந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தோம்.

நாங்கள் தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருக்கும் வேளையில் வினோத் எங்களுக்கான மத்திய உணவு சமைக்க தேவையான பொருட்களை அருகில் இருந்த கிராமத்தில் இருந்து வாங்கி வந்துவிட்டார்.

மத்திய உணவை தயாரிப்பதில் ஒருகுழு பட்டியம்மாவிற்கு உதவிகொண்டு இருந்தது. விக்னேஷ் அம்மா, லதா, தீபிகா மற்றும் மாலதி ஆகியோர் காய்கறி அரிந்து கொடுத்துக்கொண்டு இருந்தனர் . மத்திய உணவு சற்றே நேரம் ஆனதால் அனைவரும் கடும் பசியில் இருந்தோம்.


அந்த நேரத்தில் பலா கொட்டைகளை அடுப்பினுள் போட்டு வேகவைத்து எடுத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம். அந்த பலா கொட்டைகளுக்கு எனக்கு உனக்கு என்று சண்டைகள் வேறு . 2 மணியளவில் காய்கறி பிரியாணியை வெளுத்து வாங்கினோம்.

மதிய உணவிற்கு பிறகு சிறிதுநேரம் அனைவரும் ஓய்வடுக்க நல்ல நிழலான இடம் தேடி அமர்ந்தனர். நான்  ஒரு குழுவோடு அருகில் இருந்த மாந்தோப்பில் மாமர நிழலில் மிகவும் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டு இருந்தோம். திரும்பி வரும்போது புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம் .மலை அனைவரும் ஓய்வு நேரம் முடிந்து ஒன்றுகூடவும் பட்டியம்மா எங்களுக்கு கருப்பட்டி காபி கொடுக்கவும் சரியாக இருந்தது. காபி குடித்து முடித்ததும் நங்கள் கிட்டி புள் விளையாட்டு விளையாட ஆரம்பித்தோம்.

வெகு நாட்கள் கழித்து மிகவும் மகிழ்ச்சியாகவும் முழுநிறைவு அடைந்ததாகவும் உணர்ந்தேன். ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருந்தது. இதில் ஹைலைட் என்னவென்றால் ஆட்டத்தின் இடை இடையே நாங்கள் செய்த சிறுசிறு ஏமாற்று வேலைகளும் அதற்க்காக போட்ட
சண்டைகளும் தான் . சிவா அணி 116 புள்ளிகளையும் , விக்னேஷ் (எங்களை  )அணி  906 புள்ளிகளையும் பெற்று எங்கள் அணி வெற்றிபெற்றது. இருப்பினும் எதிரணி சற்றும் கூச்சப்படாமல் வெற்றி வெற்றி எங்களுக்கு வெற்றி என்று மைதானத்தை ரயில் வண்டி போல ஒரு   சுற்று சுற்றி வந்தனர். என்ன ஒரு மகிழ்ச்சி. காசு பணம் கொடுத்தாலும் கிடைக்காத மகிழ்ச்சி .

விளையாட்டு முடிந்தவுடன்  மறுபடியும் அடுத்த வேலையை துவங்கினோம். கபடி விளையாட்டிற்க்காக சமன்படுத்தப்பட்ட மைதானத்தில் இருந்த கற்களை அதன் அளவு வாரியாக பிரிப்பதுதான் எங்கள் வேலை. வேலை மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. விக்கி சிவாவை சீண்ட, சிவா மண் எடுத்து விக்கி மீது போட ஆரம்பித்தது ஆட்டம்.
தண்ணீர் குறைவாக இருந்த காரணத்தால் குளிக்க இயலாது எண்டு கூறி இருந்தார்கள். அதனால் நங்கள் அமைதியாக இருந்தோம் எந்த குரங்கு சேட்டையும் செய்யாமல் .

நங்கள் கல்பொருக்க ஆரம்பிக்கவும் மழை பொழிய துவங்கியது. சரி குளிக்க வழி கிடைத்துவிட்டது என்று அனைவரையும் போட்டு மண்ணில் உருட்டி எடுத்துவிட்டோம். நன்றாக மண்ணில் விளையாடி முடித்ததும் மழை நகர்ந்து சென்று எங்களை முட்டாள்கள் ஆக்கிவிட்டது.

பிறகு கிணத்தடியில் சென்று ஆளுக்கு ஒரு வாலி தண்ணீர் என்று ஒருவழியாக குளித்துவிட்டு வந்தோம்.

அதற்குள் இரவு உணவிற்க்காக பொருட்களும் , ஒரு பலாப்பழமும் வாங்கிவரப்பட்டது. இரவு உணவு உப்புமா விக்னேஷ் அம்மா மற்றும் ஸ்ரீதரன் அய்யா அவர்கள் தரித்துக்கொண்டிருக்க சிவா மற்றும் விக்கி பலாப்பழம் உரிக்க ஆரம்பித்தனர். அரைப்பாலம் உரித்து அனைவரும் பங்கிட்டு உண்டுமுடித்தோம்.

பிறகு சுட சுட உப்புமா உண்டுமுடித்தோம். அதன் பின்னர் சிறிதுநேரம் ராஜா ராணி விளையாட்டு விளையாடி கொண்டு இருந்தோம்.

பிறகு இரவு 12 மணியளவில் நாங்கள் அனைவரும் சந்திப்பு அறையில் அமர்ந்துகொண்டு என்னால் கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம். சிவராஜ் அண்ணா அவர்கள் இந்த பள்ளி உருவான  விதம் , கடந்துவந்த பாதைகள் , இன்ப துன்பங்கள் அனைத்தையும் எங்களுடன் பகிர்ந்துகொண்டார். எங்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டது . பிறகு இரவு 1.30 மணி அளவில் தூங்க சென்றுவிட்டோம்.

நாள் இரண்டு - வேலைகள் 19 மார்ச் , 2017
மறுநாள் ஞயாயிரு காலை எழுந்து கருப்பட்டி காபி குடித்துவிட்டு வழக்கம்போல வேலை செய்ய தொடங்கினோம். வேலை நடைபெறும் கூடத்தை சுற்றி உள்ள உபயோகமற்ற மரச்சாமான்களை எடுத்து பாதுகாப்பான இடத்தில மாற்றி வைத்துக்கொண்டு இருந்தோம்.
இப்பொழுது காலை உணவு, மறுபடியும் கேழ்வரகு கூழ் , முழங்கி தொக்கு, மற்றும் வதக்கிய சின்ன வெங்காயம் . அட அட அட என்ன ஒரு உணவு.....


பிறகு அந்த கூடத்தின் ஓடு மாற்றும் வேளையில் பழைய ஓடுகளை கீழே இறக்கவும் , புது ஓடுகளை மேலே ஏற்றி கொடுக்கவும் உதவி செய்துகொண்டு இருந்தோம்.நல்ல உச்சி வெயில் என்றுகூட பாராமல் வேலை செய்துகொண்டு இருந்தோம். அந்த நேரத்தில் குச்சி ஐஸ் விற்கும் ஒரு பெரியவர் அங்கு வரவே நாங்கள் அனைவரும் ஓடிச்சென்று ஐஸ் வாங்கி சாப்பிட்டோம். மிக்க மகிழ்ச்சி.....வேலை முடிந்த பிறகு காட்டிற்குள் ஓர் சிறிய பணம் சென்றுவந்தோம். காட்டிற்குள் மிகவும் குளுமையாக இருந்தது, சிறிதுநேரம் ஆற்றுமணலில் அமர்ந்துவிட்டு விதைகள் மற்றும் சருகுகள் சேகரித்தோம். பிறகு ஒரு குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். எங்கள் குடிலை அடையும்போது ஆண்டு சாமபார் சாதம் மற்றும் தயிர் சாதம் தயாராக இருந்தது.மத்திய உணவை முடித்துக்கொண்டு நங்கள் வந்து செல்வதற்கான கணக்கை சரிபார்த்துக்கொண்டு கிளம்ப தயாரானோம்.  நாங்கள் எங்களால் முடிந்த ஒரு சிறு தொகையை பள்ளி பணிக்காக கொடுத்தோம். சிவராஜ் அண்ணா அனைவருக்கும் ஒரு தும்பி புத்தகம் ஒன்றை பரிசளித்தார். அதன் பின்னர் அனைவரையும் அழைத்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு பிரிய விடைபெற்று கிளம்பினோம்.எங்கள் வாகனம் சென்னை நோக்கி முன்னகர, எங்கள் மனம் மட்டும் பின்னோக்கி அந்த குக்கூ பள்ளியை நோக்கி நகர்ந்துகொண்டு இருந்தது.
திரும்பி வரும் வழியில் காஞ்சிபுரம் அருகில் ஒரு உணவகத்தில் இரவு 8மணிக்கு  உணவு உண்பதற்காக வண்டி நின்றது. அன்று எனக்கு பிறந்த நாள் என்பதை விக்னேஷ் அனைவரிடமும் கூற அனைவரும் பர்த்டே பம்ப்ஸ் என்ற பெயரில் செம உதை உதைத்தனர் . விக்னேஷ் அம்மா என்னை ஒருவழியாக அதிக உதைகளில்  இருந்து காப்பாத்தினார்கள்.

பிறகு நாங்கள் கிண்டியை அடையும்போது இரவு 10.10. அங்கிருந்து நான் தொடர்வண்டியில் என் வீடு போய் சேர்ந்தேன். 

https://www.dropbox.com/sh/kx55xoyjbwxq5a2/AAC63i1zs3FLPtYRHufYRO3fa/101CANON?dl=0

https://www.facebook.com/jbalajiavm/media_set?set=a.1293992770636603&type=3

https://photos.google.com/share/AF1QipPB_O9M40QdA-obKTYRwkiebD7iN5765nmYz3mFocxn8XbDd1_l50ZKw4nx0aVHvA?key=bDlXR3NCN0pwOTFrMnFEUV9FX21vd2Y3UHdHM3FR


https://photos.google.com/share/AF1QipMjdEVTk39JEml0b4IOZi2j2JjpYFg9pkx2fg2QSS2JMq-pbGLpAkSQEJYbqrAUVw?key=WDJJa3VndDJMRnpoZV9jdXFQMGtRWUdIM0Y2Z0x3குக்கூ பற்றி மேலும் அறிந்து கொள்ள :
CUCKOO MOVEMENT FOR CHILDREN,
25/ Mandhoppu, Pa Vu Sha Nagar,
Polour Road, Tiruvannamalai - 606 601
Tamilnadu, India.
cuckoochildren@gmail.com
facebook.com/cuckoochildren
9443105633 - 9965689020 - 9442593448 - 9942118080 

தொல்காப்பியர் சூழியல் பூங்கா ஒரு பயணம் 9/03/2019

தொல்காப்பியர் சூழியல் பூங்கா ஒரு பயணம் 9/03/2019 முன்னுரை :- இப்படி ஒரு சூழியல் பூங்கா சென்னைக்கு நடுவில் இருப்பது இன்னும் பலருக்...