Tuesday, 31 May 2016

புளிகாட் லேக் மற்றும் தடா நீர்வீழ்ச்சி பயணம்  30th and 31st July 2016

இதுவே எனது முதல் புலிகாட் ஏறி மற்றும் தடா நீர்வீழ்ச்சி சென்ற அனுபவம் 

காலை எனது அலுவலக குழுவுடன் குயின்ஸ் லேண்ட் சென்றுவிட்டு வெளியே வரும்போது மாலை 6 மணி. எனது அலைபேசி ஒலித்தது, எடுத்தால் மறுமுனையில் அவினாஷ்.

மச்சி நாங்க எல்லாரும் புலிகாட் லேக் போறோம் வரியா ? எனக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை . காரணம் முந்தைய நாள் இரவும் சுத்தமாக தூக்கவில்லை, புலிகாட் லேக்  பற்றி பலர் கூற கேட்டு இருக்கிறேன். இந்த வாய்ப்பையும் நழுவவிட விருப்பம் இல்லை. இருநிமிடம் யோசித்தேன்.

பிறகு சரி நண்பா நாணும் வருகிறேன் என்று கூறினேன். என் வண்டியில் (Fazer ) என் வீடுசென்று சேரும்போது மணி 7. அவினாஷ் என் வீட்டிற்கு வந்துவிட்டான். நாங்கள் இருவரும் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் உள்ள நாதன் காப்பேவை அடைந்தோம். அங்கே எங்கள் குழுவை சேர்ந்த சசிதரன், ஹேமா, செந்தமிழ் மற்றும் குஷால் ஆகியோர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்.

நானும் சிறிது சாப்பிட்டுவிட்டு ஒரு காப்பி குடித்தேன். இரவு உணவு சிறப்பாக முடிந்தது.

6 பேர் 3 வண்டி 2 டெண்டுடன் இரவு 9 மணியளவில் புலிகாட்  நோக்கி பயணிக்க தொடங்கினோம்.

ஓவ்வொரு வண்டியிலும் இரண்டுபேர் வீதமாக நான் ஹேமா , சசி குஷால், அவினாஷ் செந்தமிழ்  ஆகியோர் பயணிக்க தொடங்கினோம்.
எங்கள் வாகனங்களில் தேவையான அளவு பெட்ரோல் நிரப்பிக்கொண்டோம். வாழைப்பழம், பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வாங்கிக்கொண்டோம்.

ஹேமாவின் நண்பன் கொடுத்த கூகிள் வரைபடத்தை வைத்துக்கொண்டு இடம்தெரியாத சிறுசிறு கிராமங்களுக்குள் பயணம் செய்துகொண்டிருந்தோம். ஒருவழியாக புலிகாட்  லேக் அருகில் வண்டியை நிறுத்திவிட்டு ஏரியின் கரையருகில் சென்றோம்.

அங்கு சென்றவுடன்  எனக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. அது என்னவென்றால் நாங்கள் இரவு தூங்கபோவது ஒரு தீவு, அதற்க்கு படகில்தான் செல்லவேண்டும் என்பதே.

இதுவரையிலும் நன் இந்த ஏரியை எதோ ஒரு சாதாரண ஏரிபோலும் , அதன் கரையில் முகாமிட்டு , கேம்ப் பாயர் அமைத்து பேசிகளிக்கும் இடம் என்று நினைத்திருந்தேன்.

எனக்கு இந்த திருப்புமுனை மிகவும் பிடித்திருந்தது.

ஹேமா முன்னதாகவே சென்னை மலையேற்ற குழு நண்பர்கள் மூலம் ஒரு படகோட்டியை எங்கள் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.


நங்கள் படகில் ஏறி அமரும்போது மணி நள்ளிரவு  12 மணி. ஒருமணிநேர படகு சவாரி.

படகுசவாரியின் போது நாங்கள் அனைவரும் பேசிக்கொண்டே வந்தோம். ஹேமா திட்டிக்கொண்டே வந்தால் எங்களை அமைதியாக இருக்கச்சொல்லி. பிறகு ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில அமர்ந்துகொண்டு அந்த அமைதியான படகுசவாரியை ரசித்தபடி சென்றோம்.

மீன்கள் தண்ணியில் துள்ளிக்குதித்துக்கொண்டு இருப்பதாய் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்பொழுது சசி ஒருபக்கமாக கையை காட்டி அங்கே பாருங்கள் என்று சொன்னான். நாங்கள் பார்ப்பதற்குள் அது எங்கள் அருகில் வந்துவிட்டது. அது வேறொன்றும் இல்லை மழை தான் அது.

அனைவரும் ஓடிச்சென்று படகின் ஒருமூளையில் நங்கள் கொண்டுவந்திருந்த தார்போலின் பாயை விரித்து அதனுள் எங்கள் பைகளை நனையாமல் வைத்துக்கொண்டோம். ஹேமா மற்றும் செந்தமிழ் நனைந்துகொண்டே பயணம் செய்தனர். எனக்கு வேறு கண்கள் சொக்கிக்கொண்டு தூக்கம் வருகிறது , இப்பொது மழையில் நனைந்ததால் இரவு உறங்க முடியாது என்று நானும் மழையில்  நனையாமல் ஒளிந்துகொண்டேன் .

என் விவரமறிந்து மழையை கண்டு ஓடி ஒழிந்தது இதுவே முதல்முறை.

மழை சிறிது நேரத்தில் நின்றுவிட்டது. மழை நிற்கவும் நாங்கள் தீவை சென்றடையவும் நேரம் சரியாக இருந்தது. நேரம் சரியாக 1.10 மணி.

தீவை அடைந்ததும் முகாம் அமைக்க நல்ல இடம் தேடிக்கொண்டிருந்தோம்.
ஒருவழியாக முட்டைகள் இல்லாத இடத்தில முகாம் அமைக்க ஒரு இடம் கிடைத்தது. இரண்டு டென்டுகளையும் போட்டுவிட்டது அனைவரும் உறங்க செல்லும்போது மணி காலை 1.45.

நான் , செந்தமிழ், அவினாஷ் தூங்கிக்கொண்டிருந்த டென்ட் காற்று மிகுதியின் காரணமாக சாய்த்துவிட்டது. இருப்பினும் களைப்பு மிகுதியின் காரணமாக நாங்கள் அப்படியே உறங்கிவிட்டோம்.

காலை 5 மணியளவில் அனைவரும் எழுந்தோம். எங்கள் டென்ட்டை விட்டு வெளியே வந்ததும் ஒரே மகிழ்ச்சி. சுற்றிலும் கிட்டத்தட்ட 200 பாய்மரப்படகுகள் ஒரே மாதிரி நீல வண்ணத்தில் அங்கும் இங்கும் பயணித்துக்கொண்டு இருந்தது. என்ன ஒரு ரம்மியமான காட்சி.

எனக்கு இந்த இடம் மிகவும் பிடித்துப்போனது. அனைவரும் பாய்மரப்படகுகளை ரசித்துக்கொண்டு இருந்தோம்.

நங்கள் அனைவரும் சுற்றிலும் புகைப்படம் எடுத்துகொண்டம்.

பிறகு தடா நீர்வீழ்ச்சி செல்வதாக திட்டமிட்டு படகில் ஏறி அமர்ந்தோம். கரை நோக்கி செல்ல செல்ல சுற்றிலும் இருந்த சின்ன சின்ன கிராமங்கள் தெரிந்தது. மிகவும் அருமையாக இருந்தது அந்த படகு சவாரி.

கரைக்கு வந்ததும் நாங்கள் எங்கள் வண்டிகளை எடுத்துக்கொண்டு தடா நோக்கி பயணிக்க தொடங்கினோம் .

செல்லும் வழியில் ஒரு உணவகத்தில் காலை உணவை முடித்துக்கொண்டோம். பிறகு தடா நீர்வீழ்ச்சியை அடைந்தோம்.

ஆந்திரா வனத்துறையினர் எங்கள் பைகளை சோதித்துவிட்டு  நுழைவுச்சீட்டு வழங்கினார். பின் நங்கள் எங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு எங்கள் பைகளை வனத்துறையினரிடம் ஓப்படைத்துவிட்டு நீர்வீழ்ச்சி நோக்கி நடக்க தொடங்கினோம். வாகனம் நிறுத்தும் இடத்தில ஒரு சிறுவன் நாவல் பழம் விற்றுக்கொண்டிருந்தான் அதை வாங்கி சுவைத்துக்கொண்டே முன்னோக்கி சென்றோம். நாவல் பழம் மிகவும் சுவையாக இருந்தது.

காலை வரதராஜாவிற்கு செந்தமிழ் அலைபேசியில் அழைத்து தடா வருமாறு கூற, ராஜாவும் தடா நோக்கி கிளம்பி இருந்தான்.

நாங்கள் பாதி தூரத்தில் ஒரு சிறிய குளத்தில் குளித்துக்கொண்டு இருந்தோம். பிறகு கடைசி நீர்வீழ்ச்சி நோக்கி நடக்க ஆரம்பித்தோம். இங்கு நான் ஒரு அத்தி பழ மரத்தை பார்த்தேன்.

சிறுது நேரத்தில் நீரிவீழ்ச்சியை அடைந்துவிட்டோம். நாங்கள் குளித்துக்கொண்டு இருக்கும் போது வரதராஜா வந்துவிட்டான். அவன் வீட்டிலிருந்து தோசை உருளைக்கிழங்கு பொரியல், அவரை குழம்பு ஆகியவை கொண்டுவந்திருந்தான். மிகவும் சுவையாக இருந்தது.

சாப்பிட்டு முடித்தும். நீர்வீழ்ச்சியின் மேல் உள்ள குளத்திற்கு சென்று நன்றாக குளித்துவிட்டு கீழே இறங்க ஆரம்பித்தோம்.
எனக்கு அன்று மாலை அலுவலகம் செல்ல வேண்டி இருந்ததால் அனைவரும் அங்கிருந்து கிளம்பினோம் .


திருப்பி செல்லும் வழியில் ஒரு உணவகத்தில் நல்ல காரமாக உணவு உண்டுவிட்டு வீடுவந்து சேரும்போது மாலை 7.மணி.

No comments:

Post a Comment

Thanks for your comments.

CTC ஐந்திணை - குக்கூ   காட்டுப்பள்ளி   ஒரு பயணம் மார்ச் 18 & 19 2017 குக்கூ காட்டுப்பள்ளி             நாங்கள் எங்கள் ந...