Wednesday, 11 May 2016

இயற்கை முறை சார்ந்த வேளாண் முறையை தெரிந்துகொள்வாத்ற்கான முகாமில் நான் பெற்ற அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து    கொள்வதர்க்காண ஒரு கட்டுரைதான் இது. 

Event Date: 4th and 5th April 2015


முன்னுரை:-
                இந்த உலகத்தை ஒரு சதவீதம் கூட உன்னால் மாற்றமுடியாது, ஆனால் உன் சுய கட்டுபாடு, ஒழுக்கம் மற்றும் சமூகம் சார்ந்த அணுகுமுறைகளை இந்த உலகத்தால் ஒருபோதும் தடுத்து நிறுத்திவிடமுடியாது என்று என் அறிவும், மனமும் ஒரு நிலைக்கு வந்து எனக்கு உணர்த்திய தருணத்தில், நான் என்ன செய்ய போகிறேன்? அதை எப்படி செய்யப்போகிறேன்? என்று திக்குதெரியாமல் நின்றிருந்த சமயம் Chennai Trekking club  என்ற அமைப்பின் இந்த முகாமிற்கான அழைப்பு வந்தது. இந்த வாய்ப்பை 100% உபயோகிக்க நான் முடிவுசெய்தேன் . இந்த முகாமில் நான் பெற்ற அனுபவங்களையும் , சந்தித்த சில மனிதர்களையும் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த கட்டுரையை தொடர்கிறேன் . என் கருத்துக்களில் தவறேதும் இருந்தால் மன்னிக்கவும்.

பொருளுரை:-
                இந்த முகாமிற்காக திட்டமிட்டபடியே நான் கிண்டி சந்திப்பு பகுதிக்கு முன்கூட்டியே வந்துவிட்டேன் , ஏன் எனில் கிண்டி சந்திப்பு பகுதியில் இருந்து வரக்கூடிய தோழர்களை ஒருங்கிணைக்கக்கூடிய பொறுப்பு என்னிடம் தரப்பட்டிருந்தது. அதேபோல் நான் அனைவரையும் ஒருங்கிணைத்து அவ்வப்போது வந்த வாகனங்களில் ஏற்றி அனுப்பிவிட்டேன், பின்பு நான் திரு.மிதுன் குமார் கொண்டுவந்த வாகனத்தில் ஏறிக்கொண்டேன் . எங்களுடன் மனோஜ் மற்றும் அஷ்டலட்சுமி பிரியா ஆகியோர் உடன் வந்தனர். இதனிடையில் ஐந்திணை அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மரம் நடும் முகாம் எதிர்பாராத விதமாய் ரத்து செய்யபட்டதால் தினேஷ் மற்றும் அவரது குழுவும் எங்களுடன் இணைந்து கொண்டனர்.
                சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வாகனங்கள் அனைத்தும் கோயம்பேடு நாதன் கபே முன்பாக சந்தித்து கொண்டன. அடுத்த சந்திப்பு பகுதி பூந்தமல்லியில் உள்ள KFC என்று முடிவு செய்துகொண்டு வாகனத்தை செலுத்தினோம். பூந்தமல்லியில் இன்னும் சில தோழர்கள் சேர்ந்து கொண்டனர். தினேஷ் மற்றும் அவரது குழு  இரவு உணவுக்கான காய்கறிகளை வாங்கிக்கொண்டு வந்து எங்களுடன் சேர்ந்துகொண்டனர். பின் அனைவரும் இலக்கை நோக்கி கிளம்பினோம். 

                நாங்கள் தேர்ந்தெடுத்து சென்ற வழி சற்று அதிருப்தியை தந்தாலும் அவை அனைத்தையும் தாண்டி ஒரு சிறிய கிராமத்திற்குள் செல்லும் வழியிலே  அனைவரும்  சந்தித்து கொண்டோம். அருகில் இருந்த மிளகாய் தோட்டதில் இருந்த வாய்க்கால் வரப்பில் சிறுபிள்ளைகள் இறங்கி விளையாடிய காட்சி இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. 


இந்த இடதில் நான் இதை பதிவு செய்தே ஆகவேண்டும். எங்களின் வேண்டுகோளுக்கு இணங்கி புகைப்பட கருவி தருவித்திருந்த திரு சங்கித் , முத்துக்குமார், மோகன் இன்னும் பலருக்கு நன்றி கூறியே ஆகவேண்டும். மிகவும் நன்றி தோழர்களே ......!

பின் தொடர்ந்து பயணிக்க முனைந்தோம். பின் அரக்கோணத்தில் ஒரு இடத்தில் தேனீர் மற்றும் போண்டா , பஜ்ஜி போன்ற பதார்த்தங்களை சுவைத்து சிற்றுண்டியை முடித்துக்கொண்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம். சில கிராமங்களை கடந்து நாங்கள் அடையவேண்டிய இடத்தை வந்தடைந்தோம். வழியில்  மிதுனின் வேண்டுகோளுக்கினங்க நான் 2 கிலோ சப்போட்டா பழங்கள் வாங்கிவந்தேன் .
                வந்திறங்கிய நேரம் இரவு 7.30 மணி என்பதால் அந்த இடத்தின் அழகு எங்களுக்கு தெரியவில்லை.

இரவு உணவு தயாரிப்பு

                                நாங்கள் கொண்டுவந்திருந்த காய்கறிகளை ஒரு குழுவினர் வெட்ட தயாரானோம். கேரள நண்பர்களும், நானும், ப்ரியா, கீதா, மற்றும் சிறுபிள்ளைகள் சிலபேரும் சேர்ந்து காய்கறிகளை வெட்டி முடித்துவிட்டோம்.இதன் இடையில் வினோத்தும் அவரது குழுவினரும் சேர்ந்து தயிர் சாதத்திற்கான சாதத்தை வடித்து விட்டனர்.
                இன்னொரு குழுவினர் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தனர், கதை சொல்வதாக கூறி மொக்கையும் போட்டுக்கொண்டிருந்தனர்.
                நாங்கள் காய்கறி பிரியாணி சமைக்க தயாரானோம். சமைக்கும் போது இடை இடையே காதுகளில் விழுந்த இனிமையான வார்தைகளை இங்கு பதிவு செய்கிறேன்.
போட்டோகிராபர்........! மற்றும் வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே ................!

                ஒரு நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிரியாணியை தயார் செய்து முடித்து விட்டோம். இதன் இடையில் நானும் கேரள நண்பர்களும் சேர்ந்து தயிர் சாதம் தயார் செய்து விட்டோம். வினோத் பன்னீர் பட்டர் மசால் செய்திருந்தார்.
குழந்தைகளின் விளையாட்டு

                முகாமில் கலந்துகொண்ட அனைத்து குழந்தைகளும், சில தோழர்களும் வட்டமாக அமர்ந்து கொண்டு ரகசிய வார்த்தை பரிமாற்றம் செய்யும் விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தனர் .


சிறிது நேரம் வினோத் கதை சொல்லுவதாக கூறி மொக்கையும் போட்டுக்கொண்டிருந்தார். குழந்தைகள் அவரை கலாய்க்க தொடங்கியவுடன் எங்களுடன் சமையலில் வந்து சேர்ந்துகொண்டார். 


உணவு பரிமாறியது

                உணவு தயாரானவுடன் முதலில் குழந்தைகளுக்கு பரிமாறப்பட்டது. பின் ஒருவர்பின் ஒருவராக சாப்பிட்டு முடித்தோம். அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன் நான், தினேஷ்,வினோத், நிரஞ்சன், மனோஜ் , ப்ரியா ஆகிய அனைவரும் ஒன்றாக அமர்ந்து எல்லா உணவையும் சாப்பிட்டு முடித்து விட்டோம்.


குளிர்காயும் நிகழ்ச்சி

                உணவு சமைக்கும் நேரத்தில் பாலாஜி மற்றும் அவரது குழுவும் சேர்ந்து குளிர் காய்வதற்கான விறகுகளை சேகரித்துக் கொண்டிருந்தனர் , அனைவரும் சாப்பிட்டு முடித்த உடன் சுள்ளி விறகுகளுக்கு தீ மூட்டி குளிர்காய்வுக்கு ஏற்பாடும் செய்துவிட்டனர். 

பின் அனைவரும் தீயை சுற்றி அமர்ந்து கொண்டு பேச தயாரானோம். தீயுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டோம். குழந்தைகளுடன் வந்திருந்தவர்கள் குழந்தைகளை  உறங்க வைத்து விட்டு வந்து கலந்துகொண்டனர் .

அறிவு & அனுபவ பரிமாற்றம்
                முதலில் அனைவரும் சுய அறிமுகத்தோடு பேச ஆரம்பித்தனர். அனைவரும் மிகவும் ஆர்வமாக அவரவர் அறிந்திருந்த விடயங்களை எவ்வித தயக்கமும் இல்லாமல் பகிர்ந்துகொண்டனர். இந்த கலந்துரையாடலில் பல விடயங்கள் எனக்கும், இன்னும் சிலருக்கும் மிகவும் புதுமையாக இருந்தது. பின் நாங்கள் மாடித்தோட்டம் அமைக்கும் முறைகளையும் , விவசாய நிலத்தில் இயற்க்கை உரங்களை உபயோகிக்கும் உத்திகளையும் பற்றி தீவிரமாக பேசிக்கொண்டிருந்தோம்.
               
கலந்துரையாடலில் நான் அறிந்த புதிய விடயங்கள்
பஞ்சகவ்யம்
                பஞ்சகவ்யம் என்பது ஒரு இயற்க்கை உரம். இதை
பசு சாணம், கோமியம் , பால் , நெய் மற்றும் தயிர் ஆகியவற்றை குறிப்பிட்ட விகிதத்தில்   சேர்த்து தயாரிக்கப்படும் மிகவும் சக்தி வாய்ந்த உரம் ஆகும்  . பயிர்களுக்கு சக்தியை தருவதோடு எந்தவிதமான பூச்சிகளும் அண்டாமல் தடுக்கிறது.
மூலம் : திரு மிதுன் குமார்
தேற்றான் கொட்டை
                மெண்ணீர் அதிகமாக கிடைக்காத பகுதிகளில் கடினநீரை மெண்ணீராக்க மாற்ற எத்தனையோ செய்முறைகள் உள்ளன. இதை மிகவும் எளிமையாக , சிறந்தமுறையில் செய்ய இந்த தேற்றான் கொட்டைகள் பயன்படுகின்றன. ஒரு தொட்டியில் கடினநீரை ஊற்றி அதில் சில தேற்றான் கொட்டைகளை போட்டுவிட்டால் போதும் அடுத்தநாள் அந்த கடினநீர் மெண்ணீராக மாறியிருக்கும். அனைத்து வேதிபொருட்களும் தொட்டியின் அடிபகுதிக்கு சென்றிருக்கும்.
மூலம் : திரு முத்துகுமார்

மீன்கழிவு உரம்
                நாம் வீட்டில் சமைக்கப்படும் மீனின் எஞ்சிய கழிவுகளுடன் (தலை,வால்,முட்கள்,செதிலகள் மற்றும் பல ) சம விகிததில் வெள்ளம் சேர்த்து ஓரு
கண்ணாடி குடுவையில் 45நாட்கள் வைத்திருந்தால் அவை அனைத்தும் மக்கி உரமாக மாறியிருக்கும் . இந்த உரமும் மிகவும் சக்திவாய்ந்தது .
மூலம் : திரு முத்துகுமார்

மாடி தோட்டதிற்கும் ,விவசாயத்திற்கும் உள்ள வேறுபாடுகள்
                திரு தட்சிணாமுதி அவர்கள் மடித்தோட்டத்திற்கும், விவசாயத்திற்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளையும் அவற்றை நேர்த்தியாக செய்வதற்கான  வழிமுறைகளையும், சாத்தியக்கூறுகளையும், நமது இந்த செயல்பாட்டின்மேல் சமுதாயத்திற்கு உள்ள பார்வையையும் மிகவும் தெளிவான சிந்தனையுடன் அனைவருக்கும் புரியும்படி விளக்கி கூறினார்.
                முடிந்தவரை உரையாடிவிட்டு அனைவரும் உறங்கசென்றபோது மணி சரியாக விடியற்காலை 2.20. இதை வடிவேலு பாணியில் கூறவேண்டும் என்றாள்
நாங்கள் கண்கள் மூடிய நேரமும் , கோழி கூவும் நேரமும் ஒரே கோரஸ்ஸா இருந்ததுனா பாத்துக்கோங்களேன்

காலை வயல் பயணம்
                திட்டமிட்டபடி திரு.கண்ணன் அவர்களால் வரமுடியாத காரணத்தால் திரு.மணி அவர்கள் எங்களுக்கு வயலை நன்றாக சுற்றிக்காட்டினார். அவர்கள் வளர்க்கும் பயிர்களையும் அவற்றின் வளர்ப்பு முறைகளையும் தெளிவாக கூறினார் . சிறுகுழந்தைகளும் ஆர்வமாக பல கேள்விகளும் கேட்டனர்.

                நாங்கள் சென்றிருந்த பொழுது நிலக்கடலை,வெண்டைக்காய், தக்காளி, பச்சை மிளகாய், கத்தரிக்காய், அவரை, பீர்க்கங்க்காய் மற்றும் பூசணிக்காய் ஆகியவை பயிரிடப்பட்டிருந்தது .


அங்கு நான் நிலக்கடலை தோட்டத்தில் கடலைகளை செடியுடன் பிடுங்கி குழந்தைகளுக்கு காண்பித்தேன் . அவர்கள் அதை மிகவும் மகிழ்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் பார்த்தனர். 

( இது நாந்தனுங்கோ ) 

பின் நாங்களே தயார் செய்திருந்த தேனீரை அருந்திவிட்டு களை எடுக்கும் பணிக்கு தயாரானோம். வேலை முடிந்தவுடன் அனைவரும் பம்புசெட்டில் ஒரு ஆனந்த குளியல் போட்டோம் . நானும் சில நண்பர்களும் கழிமண் தேய்த்து குளித்தோம். என்ன ஒரு ஆனந்த குளியல். வெகு நாட்களுக்கு பிறகு இந்த கழிமண் குளியலை இங்குதான் பெற்றேன்.

                ஒருவழியாக குளித்துமுடித்து விட்டு வந்தவுடன் தற்பூசணி பழம் சாபிட்டோம். பின் சிறிதுநேர உரையாடலுக்குபின் முன்னால் இரவே செய்துவைத்திருந்த கேபை கூழையும் , வெங்காயதையும் சேர்த்து ஒரு பிடி பிடித்து விட்டோம். உண்மையில் உமா அக்கா நன்றாக கூழ் தயார் செய்திருந்தார் . 


நான் ரசித்தவை
ü  என்னுடன் வந்திருந்த குழுவினர் அனைவருக்கும் உணவு சமைக்க உதவியது.
ü  நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது.
ü  சிறுகுழந்தைகளுடன் விளையாடியதும், அவர்களின் ஆர்வமான கேள்விகளும்.
ü  திரு.தட்சிணாமுர்த்தி அவர்களின் மகள் எடுத்த விவசாய குறிப்புகள்.
ü  வாகனத்தின் கண்ணாடியில் உள்ள தூசியில் குழந்தைகள் வரைந்த ஓவியம்.
ü  அதிக அளவில் செடிகள் இருந்தும், போர்வை போர்த்திக்கொள்ளாமல்  திறந்தவெளியில் ஒரு கொசு கூட இல்லாமல் நிம்மதியாக, சுத்தமான காற்றில் உறங்கியது.
ü  சுதந்திரமான கழிமண் குளியல்.
ü  நினைத்தவுடன் பார்க்க முடியாத இடத்தில் இருக்கும் பெரிய மனிதர்களின் நட்பு .
ü  களை பிடுங்கும்போது களவொழுக்கம், அகத்திணை,புறநானூறு, திருக்குறள், இராமாயணம் பற்றிய சுவாரசியமான பேச்சுக்கள்.
ü  என் வாழ்விலேயே முதன்முறையாக சோம்பு மற்றும் உளுந்து செடிகளை பார்த்தது.
ü   சுவையான கூழ்.

முடிவுரை :
                                இந்த முகாமில் நான் நினைத்து வந்த அனைத்து விடயங்களும், அனுபவங்களும் நன்றாகவே கிடைத்தது. மீண்டும் இதுமாதிரி ஓர் அறிய வாய்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன். இதுபோல் ஒரு அறியவாய்ப்பை ஏற்பாடு செய்த CTC மற்றும் திரு.கண்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதில்  பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

பின்குறிப்பு :
எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும். சில பேரின் பெயர்கள் மட்டுமே தெரிந்திருந்ததால் மற்றவர்களின் பெயரை குறிப்பிட முடியாதமைக்கு மன்னிக்கவும். உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.


I am really apologies to you who cannot able to read this article.

                                                                                                                                                                                                                                                                           என்றென்றும் அன்புடன்,
                                                                                                             பாலாஜி ஜோதிமணி
                                                                                                                         Mobile: +91-9677549415
                                                                                                                   Email: jbalajiavm@gmail.com
                                                                                                Facebook: www.facebook.com/jbalajiavm

No comments:

Post a Comment

Thanks for your comments.

CTC ஐந்திணை - குக்கூ   காட்டுப்பள்ளி   ஒரு பயணம் மார்ச் 18 & 19 2017 குக்கூ காட்டுப்பள்ளி             நாங்கள் எங்கள் ந...