Thursday, 12 May 2016

ஐந்திணை 3-ஆம் பிறந்தநாள் மரம் நடும் விழா – தென்னேரி ஒரு பார்வை

ஐந்திணை 3-ஆம் பிறந்தநாள் மரம் நடும் விழா – தென்னேரி ஒரு பார்வைஐந்திணை 3-ஆம் பிறந்தநாள் மரம் நடும் விழா – தென்னேரி ஒரு பார்வை
திட்டமிட்டபடி 5 மணிக்கு கிண்டியில் இருந்து எங்கள் வாகனம் தாம்பரத்தை நோக்கி கிளம்பியது. இந்த வாகனத்தில் எனக்கு தெரிந்த முகம் ஒன்றுதான் , அது  நிரஞ்சன். எங்கள் வாகனத்தில் 12 பேர் இருந்தனர் அதில் ஒரு ஜப்பானியரும் இருந்தார் அவர் இந்திய கலாச்சாரத்தை பற்றி படிக்க இந்தியா (SRM University) வந்திருப்பதாக தெரிவித்தார். வண்டி தாம்பரத்தில் நின்றது அங்கு சில நண்பர்கள் எங்கள் வாகனத்தில் சேர்ந்துகொண்டனர்.
தாம்பரம் சந்திப்பு பகுதியில் நிறைய தெரிந்த முகங்கள் தென்பட்டன. ஒரு சிறிய உரையாடலை போட்டுவிட்டு கிளம்பினோம். பல பகுதிகளில் இருந்து வந்த கார்களும் எங்களுடன் இணைந்துகொண்டது. காலை 5.3௦ மணி, நாங்கள் அனைவரும் தென்னேரியை நோக்கி பயணிக்க ஆயர்தம் ஆனோம். பசி வயிற்ரை கிள்ளிக்கொண்டு இருந்தது.
காலை 6.3௦ மணி அனைவரும் தென்னேரியை அடைந்தோம். அங்கு முந்தைய நாள் இரவே தங்கி இருந்த நண்பர்கள் குழி தோண்டுவதற்கான ஆயர்த்த பணிகளை பார்த்துக்கொண்டு இருந்தனர். நாங்கள் சென்றதும் அவர்களுடன் இணைந்துகொண்டோம்.
மணியும், அருணும் நாங்கள் வருவதற்கு முன்பாகவே அங்கு வந்து இதற்குமுன் நடப்பட்டு இருந்த மகன்றுகளுக்கு நீர் ஊற்றிக்கொண்டு இருந்தனர். நான் அவர்கள் ஊற்றும் நீரிலேயே முழுவதும் என்னை நனைத்து குளித்துவிட்டேன்.

பானகம் தயாரிப்பும் அபிராமியின் கொலைவெறியும்:

மனோஜ், நிரஞ்சன், மணி ஆகியோர் பானகம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது இருந்தனர். மணி மிகவும் சிரமப்பட்டு வெல்ல கட்டிகளை அரைமணி நேரமாக உடைத்துக்கொண்டு இருந்தார். அபிராமி எங்கிருந்தோ வேகமாக வந்தார். மணியை எழுபிவிட்டுவிட்டு ஐந்து நிமிடங்களில் அணைத்து வெல்ல கட்டிகளையும் அடித்து உடைத்து தூல் தூலாக துவம்சம் செய்துவிட்டார்.


யார் மேலோ இருந்த கொலைவெறியை பாவம் அந்த வெல்லத்தின் மீது காட்டி தீர்த்துவிட்டார். பின்பு பானகம் செய்யும் வேலை இனிதே தொடர்ந்தது.


குழிதோண்டுதல்:
வந்தவர்கள்  நான்கு, ஐந்து குழுக்களாக பிரிந்து குழி தோண்ட ஆரம்பித்தோம். ஒவ்வொரு குழியும் 1 ½ அடி விட்டமும்  1 ½  ஆழமும் இருக்குமாறு குழிகள் தோண்டப்பட்டன.
நல்லவர் யாவரும் ஒதிங்கிகொண்டல் நரிகளின் நாட்டமை தொடங்கிவிடும் வாலிபர் கூட்டணி வாள் எடுத்தாள் வலப்பக்கம் பூமி திரும்பிவிடும் !!!!!!
ஆயிரம் இளைஞர்கள் துணிந்து விட்டால் ஆயிதம் எதுவும் தேவை இல்லை!!!!!!!!!!!!


எங்களின் இலக்கு 80 மரக்கன்றுகள் நடுவதாக இருந்தது. இருபினும் நாங்கள்அனைவரும் சேர்ந்து 150 கும் மேற்பட்ட குழிகளை தோண்டினோம் .நான் எந்த குழுவுடனும் சேராமல் எல்லா குழுவிலும் இருக்கும் வேலையை பார்துக்கொண்டிருந்தேன்.அருமையான பானகம்:
கடுமையான பசியில் அனைவரும் வேலை செய்துகொண்டிருக்க மேலே குறிப்பிடிருந்த குழு பானகம் தயார் செய்து கொண்டுவந்தனர்.
மண்குவலையில் அந்த பானகத்தை அருந்தியது, அருமையிலும் அருமை. மிகவும் நேர்த்தியான முறையில் பானகம் தயாரிக்கப்பட்டு இருந்தது. நான் ஆறு குவளை பானகம் குடித்திருப்பேன் என்று நினைக்கிறன்.மரக்கன்றுகள்:
குழிதோண்டி முடித்தவுடன் மரக்கன்றுகள் வனத்துறை வாகனத்தில் வந்து இறங்கியது. நாங்கள் அனைவரும் குழிக்கு ஒரு மரக்கன்று வீதமாக எல்லா குழிக்கும் வைத்துகொண்டே வந்தோம்.     பிரசன்னா எவ்வாறு மரக்கன்றுகள் நடுவது என்று தமிழ் கலந்த ஆங்கிலத்தில் தெளிவாக விளக்கம் கொடுத்தார்.மரக்கன்றுகள் நடும் பொழுது  நிர்ஞ்சணி மற்றும் ரகு இருவரும் காலை உணவு மற்றும் வாகனத்திற்க்கான வாடகையை வசூல் செய்யும் வேலையை பார்துக்கொண்டிருந்தனர். இறுதியில் சரியாக கணக்கும் சமர்பிக்கப்பட்டது.
இறுதியாக நாங்கள் 150+ மரக்கன்றுகளை நட்டு முடித்துவிட்டோம்.

மரம் நடும் முறை:

1.  முதலில் நாம் மறக்கன்றில் உள்ள பாலிதீன் பையை மண் உருளை உடையாமல் மெதுவாக பிரிக்க வேண்டும்.


2.   மண் உருளையே அந்த மரக்கன்றின் தாய் மண் ஆகும்.

3.   மண் உருளையை குழியின் நடுவில் வைக்க வேண்டும்.


4.   பின் அந்த மண் உருளையை சுற்றி மிருதுவான மண்ணை போடவேண்டுறம் .


5.   பிறகு ஒரு அளவிற்கு கடினமான மண்ணை அதன்மேல் போட்டு காலால் மண் உருளை உடையாதபடி மெதுவாக மிதித்து மண்ணை திடபடுத்த வேண்டும்.

6.   பிறகு அந்த மண்மீது மல்சிங்(mulching) போடவேண்டும். அதாவது காய்ந்த இலை, சருகுகள், தென்னை நார் மற்றும் புற்கள். இவை அனைத்தும் மண்ணின் ஈரப்பதத்தை வெகுநேரம் தக்கவைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது மற்றும் இதுவே உரமாகவும் செயல்படுகிறது.பிரசன்னாவின் குறிப்புகளின் படி நாங்கள் அனைவரும் மரம் நட ஆரம்பித்தோம். நங்கள் பிரித்துவைத்த பாலிதீன் பைகளை ஒரு குழு தனியாக சேகரித்துச்சென்றது.
பெண்களின் பேருதவி:  
ஆண்களுக்கு பெண்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஒவ்வொரு பெண்ணும் நடந்துகொண்டனர். குளிதோண்டுதல், மண் எடுத்தல், மரம் நடுதல், உரமிடுதல், நீருற்றுதல் என்று எல்லா விதமான வேலைகளிலும் ஆண்களுகுக்கு உதவியாகவும், தனியாகவும் அசத்திக்கொண்டு இருந்தனர்.நாங்கள் நட்ட மர வகைகள் :
ü  நீர் மருவு மரம்
ü  குமிழ் தேக்கு
முன்பே நட்ட மரவகைகள்

ü  ஆலமரம்
ü  எழிலை பாளை
ü  வேங்கை
ü  தேக்கு
ü  நீர் மருவு மரம்
ü  ரிச்சடியா

புங்கை மரத்தின் சிறப்பு :
ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்து புங்க மரம்தான். எந்தப் பகுதியிலும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடியவை. அதிக நிழலை தரக்கூடியது. பசுமை படர்ந்த மரமாக காட்சியளிக்கும்.இந்த மரத்தின் இலைகளை ஆடு, மாடுகள் தின்பதில்லை. எனவே இந்த மரம் நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
புங்கை மரத்தின் தாயகம் இந்தியா. குறிப்பாக தென்னிந்தியாவில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலேயே இவை தோன்றியிருக்க வேண்டும் என்று தாவரவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் விதைகளில் 25-40% எண்ணை இருப்பதே இதனை முக்கியமான மாற்று எரிபொருள் மரமாக கருதக்காரணம். ஏற்கனவே இதன் எண்ணை சோப்பு, விளக்கெரிக்க, பெயிண்டுகள், ஆயுர்வேத மருந்து,இயற்கை பூச்சிக்கொல்லி ஆகியனத் தயாரிக்க பயன்ப்படுத்தப்பட்டு வருகிறது. கசப்பு தன்மை கொண்ட எண்ணை என்பதால் சமையலுக்கு பயன்ப்படுத்துவதில்லை.
வெப்பத்தின் தன்மையை உறிஞ்சி சீரான சீதோஷ்ண நிலையை ஏற்படுத்தும் குணம் இதற்கு உண்டு. புங்கை மரத்தின் மலர்கள், விதைகள், இலைகள், பட்டை,வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை.

நாவல் மரத்தின் சிறப்பு

நாவல் மரத்திற்கென்று பெரிய மருத்துவ குணங்கள் உண்டு. நாவல் பட்டை சாறு எல்லா வகையிலும் நல்லதைக் கொடுக்கும். நாவல் இலையை பொடி செய்து சாப்பிட்டால் பேதி நிற்கும். இந்தப் பொடியால் பல் தேய்த்தால் பல் ஈறுகள் வலுவடையும். நாவல் இலையின் சாம்பல் நாள்பட்ட தீக்காயங்கள், வெட்டுக் காயங்களை குணப்படுத்தும். 

நாவல் பழம் நீரிழவு நோய் எனப்படும் சர்க்கரை வியாதியை எல்லா வகையிலும் தீர்க்கக் கூடியது. விநாயகருக்கும் நாவல் பழம் மிகவும் விசேஷமானதாக இருக்கிறது. குறிப்பாக விநாயகர் சதுர்த்தி அன்று நாவல் பழம் வைத்து, வழிபட்டால் நல்லது என்று சொல்வார்கள்.

நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் உடம்பிற்கு குளிர்ச்சி தரும். மேலும் சிறுநீரகப் பாதையில் உள்ள தொற்றுகளை விரட்டும், நீர்க்கடுப்பு பிரச்சனையையும் தீர்க்கும். சிறுநீரகத் தொற்றையும் போக்கும், சிறுநீர்க் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் போன்றவற்றையும் போக்கும் தன்மை நாவல் பழத்திற்கு இருக்கிறது. இதுதவிர, நாவல் பழத்தில் புரோட்டின், நார்சத்து, விட்டமின் சி, டி போன்றவையும் இருக்கிறது. தற்போது பல ஊர்களில் நாவல் மரம் இல்லை. மக்களுக்குத் தெரியாத இடங்களில் மட்டும் இருக்கிறது. 

பொதுவாக நாவல் மரங்களை வளர்த்தால் நல்லது. ஆனால் வீட்டில் வளர்ப்பது அவ்வளவு விசேஷம் கிடையாது. நிலங்களில் வைத்து வளர்க்கலாம். நாவல் மரங்களைத் தேடி கரு வண்டுகள் அதிகமாக வரும். கரு நாகங்களும் நாவல் மரத்தில் வந்து குடி கொள்ளும். அந்த மரத்திலிருந்து வெளிப்படக்கூடிய வைப்ரேஷன், அதனுடைய காறறின் குளிர்ச்சி போன்றவை இவைகளை ஈர்க்கும். அதனால் இதனை வீடுகளில் வளர்க்காமல், விளை நிலங்கள், தோட்டம் போன்ற இடங்களில் வளர்த்தால் நல்லது. அந்தக் காற்று உடலிற்கும் நல்லது, மகிழ்ச்சியும் தரக்கூடியது.

மந்தாரை மரத்தின் சிறப்பு மந்தாரை உள்ள வரை நொந்தாரைக் காண முடியாது' என்று ஒரு சித்தமருத்துவப் பழமொழியே உண்டு. அந்தஅளவுக்கு மருத்துவகுணங்களை கொண்டுள்ளது மந்தாரை. சென்னை போன்ற பெரு நகரங்களில் மந்தாரை இலைகளைச் சேர்த்து ஈக்குகளால் தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள்.
உணவு சாப்பிடப் பயன்படும் இந்த இரண்டாகப் பிரிந்த இலைகளையும், பலநிற மலர்களையும் உடைய சிறுசெடி வகையாகும். இதில் செந்நிற மலருடையது பெரிதாய் காணப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது.
இலை, பூ, வேர், பட்டை ஆகிய அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. மந்தாரையானது திருக்கானப்பேர் (காளையார்கோயில்), திருத்திலதைப்பதியிலும் தலமரமாக விளங்குகிறது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இலைகளில் குவார் செட்டின், அஸ்ட்ரா காஸின், ஐசோகுவர்சிட்ரின், காம்ப்ஃபெரால் க்னூக்கோசைடு, அமினோ அமிலங்கள் மற்றும் ஆல்கலாய்டுகள் விதைகளில் உள்ளன. ஆந்தோசையனின், நட்டின், அப்பிஜெனின், போன்ற வேதிப்பொருட்களும் தாவரத்தில் உள்ளன.
ரத்தக்கட்டிகளை குணமாக்கும்
மலர்கள், மிதமான பேதி மருந்து, உலர்ந்த மொட்டுக்கள், பூச்சிகளை நீக்கும். சீதபேதி மற்றும் மூலவியாதியை குணப்படுத்தும். பட்டை வயிற்றுப்போக்கில் பயன்படும். வேர்ப்பட்டை தயிர் உடன் கலந்து இரத்தக்கட்டிகளை குணப்படுத்த உதவும். அரைத்த வேர்ப்பட்டை சுக்குடன்
கலந்து குரல்வளை சுரப்பி வீக்கத்துக்கு தடவப்படுகிறது. வேர் அஜீரணத்தைப் போக்கும்.
மந்தாரைப் பட்டை சதை, நரம்புகளைச் சுருக்கி ரத்தம், சீழ்க்கசிவுகளைக்
கட்டுப்படுத்தக்கூடியவை, நோய் நீக்கி உடல் தேற்றும் மருந்தாகப் பயன்படுகிறது; உடல் பலம் மிகுக்கும். முடியின் வேர்க்கால்களை உறுதிப்படுத்தி, உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியது மந்தாரை.
Padam podavumகுமிழ் தேக்கு மரத்தின் சிறப்பு


குமிழ் மரத்தின் விஞ்ஞானப் பெயர் மெலைனா அர்போரியா ஆகும். இது வெர்பினேசியே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. ஜெர்மானிய அறிவியல் அறிஞர் ஜோஹான் ஜார்ஜ்மேலைன என்பவரை நினைவூட்டும் வகையில் மெலைனா என்ற முதற்பெயரை கொண்டது. அர்போரியா என்பது மரத்தைப் போன்றது எனப் பொருளாகும். குமிழ்மரத்தின் தாயகம் பாரசீகமாகும்.இம்மரம் பொதுவாக இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. மேலும் ஸ்ரீலங்கா, பர்மா, பங்களாதேசம், தென்சீனா, தென்கிழக்கு ஆசியா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது.நம் நாட்டில் இராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களை தவிர மற்ற பகுதிகளில் காணப்படுகிறது. ஈரச் செழிப்பான பகுதிகளில் வேகமாக நன்கு வளர்கிறது. தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இயற்கையாக வளர்கிறது. தற்பொழுது தமிழகம் முழுவதும் தனியார் நிலங்களில் பரவலாக வளர்க்கப்படுகிறது. 
கொடுக்கா புளி மரத்தின் சிறப்புகொடுக்காபுளியங்காவுக்கு கோணப்புளியங்கா, சீனிப்புளியங்கா, கொருக்கா புளி என ஊருக்கு ஒரு பெயர் உண்டு. ஒவ்வொரு ஊரிலும் இன்னும் நிறையபெயர்களால் கொடுக்காபுளி அழைக்கப்படுகிறது. அண்ணா உங்க ஊர்ல  அப்படியா சொல்வாங்க எங்கூர்ல சீன்புளிங்காம்போம் என்கிற ஆச்சர்யத்தை அடிக்கடி சந்திப்பதுண்டு. இந்தியில் இதற்கு பெயர் ஜங்கிள் ஜிலேபியாம்! (பேர் சூப்பரால்ல)

கிராமத்தில் வளர்ந்தவர்களோ நகரமோ இன்றைக்கு இருபது ப்ளஸ் வயதான யாருமே தங்களுடைய பள்ளிப்பருவத்தில் ஒருமுறையாவது கொடுக்காப்புளியை ருசிக்காமல் கடந்திருக்க முடியாது. என்னுடைய பள்ளிக்காலங்கள் முழுக்க இலவசமாக கிடைத்த ஒரே திண்பண்டம் இதுதான். ஊருக்குள் எங்குபார்த்தாலும் கொடுக்காப்புளி மரங்கள் நிறைந்திருக்கும். ஒரு நாளும் அதை காசுகொடுத்து வாங்கித்தின்றதில்லை.
சிகப்பும் பச்சையுமாக சிலது அதிகமாக பழுத்தும் சிலது பச்சைபசேலென காயாகவும் இருக்கும். இதை பறிக்கவே ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு நீண்ட கழியும் அதன் உச்சியில் ஒரு கொடுக்குமாக வைத்திருப்பார்கள். அதனால்தான் கொடுக்கா புளி என்று பெயர்வந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு பயனும் தராத தானாக வளரக்கூடிய இவ்வகை மரங்களை யாரும் வெட்டுவதில்லை.

பூவரசு மரத்தின் சிறப்பு
இதய வடிவிலான இலைகள்... மஞ்சள் நிற மலர்கள், அடர்ந்த நிழல்... குளிர்ந்தக் காற்று... இவைதான் பூவரசு மரத்தின் அடையாளம். கிராமத்துச் சிறுவர்கள், இம்மரங்களின் இலைகள், காய்களை வைத்து விளையாடுவார்கள்.
அதிகளவில் பிராணவாயுவை உற்பத்தி செய்யும் ஆற்றல் படைத்தது என்பதால்... கமலை ஏற்றத்தில் நீர் இறைக்கும்போது மாடுகள் சோர்ந்து போகாமல் இருக்க, இந்த மரங்களைத்தான் கிணற்று மேட்டில் நடவு செய்திருப்பார்கள்.
இப்படிப் பண்டை காலத்திலிருந்தே தமிழர்களின் வாழ்வோடு பின்னிக் கிடக்கும் பூவரசு... 'நாட்டுத் தேக்கு' என்று புகழப்படும் அளவுக்கு, வலிமையான மரமும்கூட.

பூவரசங்காய்களை உடைத்தால் மஞ்சள் நிறமான ஒரு திரவம் கசியும். இதனை எடுத்து அடிபட்ட காயங்கள், விஷக்கடிகள், சரும நோய்களான படர்தாமரை, செதில்படை, சிரங்கு இவைகளுக்குத் தடவி வர இளிதில் குணம் கிடைக்கும்.
இதன் பழுப்பு இலையை உலர்த்திக் கருக்கித் தேங்காய் எண்ணெயில் கலந்து போட சொறிசிரங்கு, கரப்பான்,ஊரல், அரிப்பு குணப்படும்.
நூறாண்டு சென்றதொரு நுண் பூவரசம் வேர்
நூறாண்டு குட்டைத் தொலைக்குங்காண்-வீறிப்
பழுத்த இலை, விதை, பூ, பட்டை இவை கண்டால்
புழுத்த புண் விரேசனமும் போம்.’

குட்டும், கடி, சூலை கொல்லும், விடபாகம்
துட்ட மகோதரமும், சோபையொடு-கிட்டிமெய்யில்
தாவு கரப்பான் கிரந்திதன் மேகம் போக்கிடும்
பூவரசன் காய் பட்டை பூ.’
------------------------------------------ கும்பமுனி.

பூவரசம் வேர்ப்பட்டையை நீர் விட்டுக் காய்ச்சி 50 மி.லி.யுடன் 10 மி.லி. ஆமணக்கெண்ணெய் சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடிக்க பேதியாகும். பேதி நிற்க மோர் குடிக்கவும். இதனால் சொறி, சிறங்கு, படை நோய்கள் குணமாகும்.

பெற்றோர்தந்த ரோகங்கள் பிழையால் பெற்ற பாழ் நோய்கள்
பற்றியதொழுநோய் புண்புரைகள் படர்தாமரை கரப்பான்
முற்றும்பற்றாதோடி வடும் பூவரசென்னும் மூலிகையால்
சற்றே பிள்ளை பேற்றுக்கும் தாழ்பாளாகும் பூவரசே.’
நூறு வருடமான பூவரச மரத்தின் வேரை நன்கு உலர்த்திப் பொடி செய்து முறைப்படி உண்டு வந்தால் தொழுநோய் குணமாகும்.

காலை உணவு :
ஆனந்த் அவர்கள் காலை உணவுகளை பொறுப்பாக கொண்டுவந்து சேர்தார். காலை உணவிற்காக பொங்கல், சாம்பார், தேங்காய் சட்னி ஏற்பாடு செய்திருந்தனர். மெதுவடையும் எங்கள் காலை உணவில் பங்கெடுதுக்கொண்டது.


உணவிற்காக தண்ணீர் குவளையை தன்னந்தனியாக சற்றும் சளைக்காமல் சுமந்து வந்த இரும்புமங்கை அபிராமியை படத்தில் காணலாம்.
மந்தாரை இலையில் சூடாக போடப்பட்ட பொங்கலின் அருமையான வாசனையில் பிரசன்னாவின் மகள் ஊற்றிய சட்னியுடன் காலை உணவை முடிதுகொண்டேன். உணவு பரிமாறும் குழுவிலும் நிரஞ்சன் இருந்தான். உணவளித்த அணைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. கடைசியில் சிலபேருக்கு உணவு பற்றாமல் போனதால் வாழைப்பழங்கள் கொடுக்கப்பட்டன.

மரக்கன்றுகளுக்கு நீருற்றும் நிகழ்ச்சி:
காலை உணவு முடிந்தயுடனேயே நாங்கள் நட்ட மரகன்றுகளுக்கு உற்றுவதர்காக டிராக்டரில் நீர் தயாராக இருந்தது. சில நண்பர்கள் குழாயை எடுத்து நீரூற்ற தொடங்கினர். நானும் சில நண்பர்களும் செடியின் அருகில் அமர்ந்து அந்த நீரிலேயே குளிதுத்கொண்டிருந்தோம்.
மிகவும் அருமையான அனுபவம். என்னுடன் ஒரு சிறுவனும் சேர்ந்துகொண்டான் அந்த தண்ணீரில் குளிக்க. இந்த செயலின்போது மாசு மற்றும் பிரசன்னாவை காணவில்லைசிறிதுநேரம் கழிதுபார்தல் அவர்கள் இருவரும் ட்ராக்டர் தண்ணீர் தொட்டிக்குள் இருந்து வந்தனர்.
பிறகு நானும் அந்த தொட்டிக்குள் சென்று அந்த தண்ணியில்  ஆட்டம் போட தயாரானேன். என்னுடன் சில நண்பர்களும் தொட்டியினுள் வந்து ஆட்டம் போட்டனர். இதுவரை என் வாழ்நாளில் கண்டிராத ஒரு அனுபவம் இது


வனத்துறை அதிகாரி திரு.இருளாண்டி அவர்களின் உரை


ஐயா இருளாண்டி அவர்கள் நமது ஐந்திணை குழுவைப்பற்றியும், அதன் செயல்கள் பற்றியும் மிகவும் பெருமையாக கூறினார். அவரும் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்வதை மிகவும் விரும்புவதாக தெரிவித்தார். பின்பு அபிராமி, மணி, மாசு, சிவா ஆகிய அனைவரும் அவரவர் கருத்துக்களை தெரிவித்தனர். எங்கள் குழுவின் சார்பாக மரக்கன்றுகள் 400 கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிய திரு. ஸ்ரீகுமார் மற்றும் வனத்துறை பதுகப்பாளர் திரு.ராமு அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.. இறுதியாக ஐயா இருளாண்டி அவர்கள் ஒரு மரக்கன்றை நட்டு விழாவை முடித்துவைத்தார்.

மூலிகை தோட்டம்.
ஐயா இருளாண்டியின் வேண்டுகோளுகிணங்க எங்களில் ஒரு குழுவினர் தென்னேரியில் இருந்து ஐயா மாசிலாமணி அவர்களின் தோட்டதிர்க்கு மூலிகை மரங்களை பற்றிய கருத்தரங்கு மற்றும் மூலிகை மரங்களை பார்வையிட சென்றிருந்தோம். மற்றோருகுலுவினர் சென்னை நோக்கி தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

போகும் விழியில் உத்திரமேரூர் சிவன் கோவிலை பார்க்கும் வாய்பு கிடைத்தது.

மதியம் 2மணி அளவில் ஐயா மாசிலாமணி அவர்களின் தோட்டத்தை அடைந்தோம். அங்கு சென்றவுடன் முதல் வேலை மதிய உணவு சாபிட்டுமுடித்தோம் . நாங்கள் மிகவும் களைப்புடன் வருவோம் என்று தெரிந்தே ஐயா இந்த மதிய உணவை ஏற்பாடு செய்திருப்பார் போலும். புதினா சாதம் , சாம்பார் சாதம்,  அப்பளம் மற்றும் வடை. மிகவும் சுவையான மதிய உணவு. உணவு முடிந்ததும் சிறிதுநேரம் மரம் வளர்த்து எவ்வாறு லாபம் ஈடுவது என்பது பற்றி ஒரு குறும்படம் பார்த்தோம். பிறகு ஐயா மாசிலாமணி அவர்கள் எங்களை அவரின் மூலிகை மரங்களை சுற்றிக்காட்ட அழைத்துச்சென்றார்.
ஒவ்வொரு மரங்களாக நின்று அதன் பெயர்களையும் மற்றும் அதன் சிறப்புகளையும் விளக்கிகொண்டே சென்றார்
நாங்கள் ஒரு 30 வகையான மூலிகை மரங்களை பார்த்திருப்போம். அதில் எனக்கு நினைவில் இருப்பதை  இங்கே உங்களுக்காக பதிவு செய்கிறேன்.

1.   ருத்ராட்ச மரம்
2.   திருவோடு மரம்
3.   மகா வில்வம்  (13 இலைகள் கொண்டது)
4.   சீகைக்கை கோடி,
5.   மாவிலங்கம் மரம்
6.   சர்கரைபழமரம்
7.   விழாம்பழம் மரம்
8.   நாகலிங்க மரம்
9.   சந்தன மரம்
10. காசி வில்வம்
11. மகிழல மரம்
12. வேங்கை மரம்
13. கடும்புளி மரம்
14. மலை வேம்பு மரம்
15. மனோரஞ்சிதம் மரம்
16. போதிமரம்
17. ஆப்பிள் (குமழிப்பழம் )மரம்
18. லவங்க இல்லை செடி ,
19. நாட்டு அத்தி மரம்
20. செம்மரம்
21. புங்கை மரம்
22. இரவு ராணி மரம்

இந்த பட்டியலில் நான் முதல் முறையாக கண்ட மரங்கள் பின்வருமாறு,
ருத்ராட்ச மரம், திருவோடு மரம், மகா வில்வம்  (13 இலைகள் கொண்டது), சீகைக்கை கோடி, மாவிலங்கம் மரம், காசி வில்வம், மகிழல மரம், கடும்புளி மரம், மனோரஞ்சிதம் மரம் , போதிமரம் , ஆப்பிள் (குமழிப்பழம் )மரம்,இரவு ராணி மரம்

ருத்ராட்ச மரம் :


ருத்ராட்ச மரம் கடுமையான குளிர் பிரதேசங்களில் இமையமலை, நேபாளம் போன்ற நாடுகளில் விளைய க்கூடியவை. ஆனால் நமது ஊரிலும் இது வளரும் என்று காட்டவே ஐயா இதை இங்கே வளர்க்க  முயற்சி செய்வதாக கூறினார். மேலும் மூன்றே வயதாகும் இந்த மரம் மிகவும் பசுமையாக வளர்ந்திருந்தது.

திருவோடு மரம்


திருவோடு மரம், இது அந்த காலத்தில் தானம் கேட்பவர்கள் தானம் பெறுவதற்காக உபயோகித்த ஒரு பொருள். அந்த காலத்தில் பெரும் மன்னர்கள் இந்த திருவோடை நடுவீட்டில் வைத்து வழிபடுவது வழக்கம்.

மகா வில்வம்  (13 இலைகள் கொண்டது)வில்வத்தின் ஒரு வகையே மகா வில்வம். இது குளுமைத் தன்மை கொண்டது. வில்வ இலைகளைவிட சற்று சிறியதாய், வட்ட வடிவில் காணப்படும். சுவையில் வில்வத்தின் இலையை ஒத்திருக்கும். கொடியைவிட சற்றுப் பெரியதாய் இதன் கிளைகள் இருக்கும். இலைகள் கூட்டிலைகளாய் காணப்பட்டு கடைசியில் மூன்று இலைகளாய் முடியும். 

அந்த மூன்று இலைகளும் சிவன், விஷ்ணு, பிரம்மா என்னும் மூவரும் நானே எனக் காட்டுவதாய் அமையும்.

மாவிலங்கம் மரம்


சிவாம்ச மூலிகை மாவிலங்கம். இதற்கு வில்வபத்திரி, வரணி, மாவிலங்கம், மாவிலங்கு, மாவிலங்கை, மகாவிலங்கமரம், அதிசரணம், மரலிங்கம், மாவிப்பட்டை, மாவிட்டை, மாவிளக்கப்பட்டை என்னும் பெயர்களும் உண்டு. இலை விரல்கள் போன்ற மூன்று கூட்டிலை அமைப்பைக் கொண்டிருக்கும். பிப்ரவரிமார்ச் மாதங்களில் புதிய இலைகள் உண்டாகும். பூக்கள் இளமஞ்சள் நிறத்தில், மரத்தில் இலைகள் உதிர்ந்திருக்கும் போது உண்டாகின்றன. மாவிலங்க மரத்தின் இலை, பட்டை, வேர் ஆகியவை மருத்துவத்திற்கு உதவும், பட்டைக் குடிநீர் கல்லடைப்பைப் போக்கும். பட்டையைச் சிதைத்து உட்புறமாக வைத்துக் கட்ட, கட்டிகள் கரையும்.


விழம்பழம் மரம்:


 சிறிய இலைகளையும், ஆங்காங்கே தடித்த முட்களையும், வறட்சியையும் கொண்ட இந்த மரம் வறண்ட பிரதேசதுகுரியது.இதன் பழங்கல் வட்ட வடிவிலும் தடித்த ஓடுகளையும் கொண்டிருக்கும்.
இந்த பழத்தில் இரும்புச்சத்தும், சுண்ணாம்பு சத்தும், வைட்டமின் ஏ வும் உள்ளது.  
மகிழல மரம்


மகிழ மரத்திற்கு இலையுதிர் காலமே கிடையாது. வருடம் முழவதும் பசுமையாக காட்டிச்சியளிக்கின்றன. சித்த வைத்தியத்தில் இந்த மகிழமர பூவிர்க்கு பெரும்பங்கு உண்டு. ஆண்களுக்கான உயிரணுவை பெருக்குவதற்கான சக்தி இதன் பூவில் உள்ளது.


கடும்புளி மரம்
இது ஒருவகையான மூலிகை மரம். புளிப்பு சுவையுடன் இருக்கக்கூடியது. கேரளா மாநிலங்களிலில் நாம் பயன்படுதும் புளிக்கு பதிலாக இந்த கடும்புலி இலைகளை சமயலில் பயன்படுத்துகின்றனர்.

மனோரஞ்சிதம் மரம்


சிறியதாய் இருக்கும் போது புதர்ச்செடி போலவும், வளர வளர மேலேறும் கொடியாகவும் போகும். இதன் தண்டில் முட்கள் போன்ற அமைப்பு இருக்கும். இலைகள் ஒன்று மாற்றி ஒன்றாக அமைந்திருக்கும் (Alternate leaves). மலரின் புற இதழ்கள் மூன்று (புல்லி வட்டம்- sepals). இவை ஒன்றன் மேல் ஒன்று அடுக்காக இல்லாமல், தனித்தனியாக அவற்றின் விளிம்பைத் தொட்டுக் கொண்டுதொடு இதழ் ஒழுங்கில் – (Valvate) அமைந்திருக்கும். அகவிதழ்கள் (அல்லி வட்டம் – Petals) ஆறு. உள் புறம் மூன்றும், வெளிப்பக்கம் மூன்றும் வட்டமைவில் (whorled)இருக்கும். கொக்கி போன்று வளைந்த காம்பில் பூ அமைந்திருக்கும். மனோரஞ்சித மலர் இளநிலையில் பச்சையாக இருக்கும். முதிர்ந்தவுடன் மஞ்சள் நிறமாகும். இதழ்கள் சதைப்பற்றுள்ளதாக இருக்கும். இதன் காய் கொத்தாக பச்சை நிறத்திலும் பழம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.

செம்மரம்.
இதை சிவப்பு சந்தனம் என்றும் கூறுகின்றனர். இந்த மரத்தின் சிறப்பு என்னவென்றால் இது கதிரியக்கதை தாங்கக்கூடிய சக்தி உடையது. எனவே ஜப்பான்,சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் கதிரியக்காதில் இருந்து தங்களை காத்துக்கொள்ள வீட்டின் சுவர்களில் இந்த செம்மரதை பதிக்கின்றனர்..


இரவு ராணி மரம்


ந்த இரவு ராணி மரம் தங்களின் பூக்களை இரவுநேரத்தில் பூக்கக்செய்கின்றன. காலை பார்த்தால் அந்த மலர்ந்த பூக்கள் எல்லாம் உதிர்ந்துவிடும். இதுவும் எனக்கு ஒரு புது வகையான ஆச்சரியமான மரமாக இருந்தது.
நாங்கள் மரங்களை பார்வையிட்டபின் அனைவருக்கும் இஞ்சி கஷாயம் கொடுக்கப்பட்டது. சூடாகவேறு இருந்ததால் அதை குடித்துமுடிப்பதற்குள் நான் பட்ட பாடு ஐயையைஐயோ...... அது அந்த கசாயத்தை குடிதவர்களுக்கு மட்டுமே தெரியும்.  அதை குடித்தயுடன் உடல் முலுக்க வேர்க்க ஆரம்பிதுவிட்டது. சிறிது நேரத்தில் நிகழ்ச்சி முடிந்து அனைவரும் வீட்டுக்கு கிளம்பிவிட்டனர். நான் தோழர் சீனிவாசனுடன் அவரது இருசர்க்கார வாகனத்தில் வீடுவந்து சேர்ந்தேன்.

நான் ரசித்தவை
மரத்திர்க்கு  ஊற்றப்பட்ட தண்ணீரில் குளித்தது, மற்றும் தண்ணீர் தொட்டிக்குள் ஆட்டம் போட்டது.
  • மரம் நடும் பொழுது அனைவருக்கும் கொடுக்கப்பட்ட பானகம்.

  • காலை உணவின் போது பிரசன்னாவின் மகள் ஊற்றிய சட்டினி.
  • உஷா அவர்கள் கேட்ட கேள்விக்கு (இந்த மரக்கன்றின் பெயர் என்ன ?) பதில் தெரியாமல் முழித்ததும், கேள்விக்கு பதில் தெரியாமல் அனைவரும் தலைதெறிக்க ஓடியாதும். கடைசியில் சிவா சரியாக கூறிவிட்டார் (குமிழ் தேக்கு )

  • பெற்றோர்களின் பொறுப்பும், குழந்தைகளின் ஆர்வமும்.

  • பிரசன்னாவின் மகள் என் கண்ணாடி, அலைபேசியை எடுத்துவைத்துகொண்டு இவை அனைத்தும் என்னுடையது உங்களுக்கு தரமுடியாது என்று கூறி சண்டைபோட்டது. அட ஆத்தாடி ஆத்தா குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிற பாழமொழியை நம்பிதிதாணே  குழந்தையிடம் என் பொருட்களை கொடுதேன். 

   நல்ல ட்ரைனிங்.... இப்படியே மெயின்டய்ன் பானுங்க. நீங்களும் யூஸ் பண்ண ஆரம்பிசிடிங்களா, யூஸ் பானுங்க, யூயூயூயூயூயூயூயூஸ் .................................
இந்த தென்னேறி மரம்நடும் விழா என்வாழ்வில் ஒரு மறக்க முடியாத அளவிற்கு இடம் பிடித்திருக்கிறது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிதுக்கொள்கிறேன்.

இந்த முறையும் நிறைய புது புது நண்பர்கள் வந்திருந்ததால் நிறையபேர் பெயர்களை நியாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. அடுத்தமுறை நியாபகம் வைத்துகொள்ள முயற்சிக்குறேன்.
இந்த பதிவில் ஏதேனும் பிழைகள் இருப்பின் மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் அத்தோடு எனக்கு தெரியபடுத்தவும்.  
இந்த் பதிவைப்பாற்றிய உங்களின் அனைவரின் தாழ்மையான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்கள் ஒவ்வொருவரின் கருத்துக்கள் என் அடுத்த பதிவை மேலும் மெருகேற்ற உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
          
                                                என்றும் அன்புடன்
                                    பாலாஜி ஜோதிமணி
                                      Mobile: +91-967754941
                                  Email: jbalajiavm@gmail.com
                     Facebook: www.facebook.com/jbalajiavm
                                 No comments:

Post a Comment

Thanks for your comments.

CTC ஐந்திணை - குக்கூ   காட்டுப்பள்ளி   ஒரு பயணம் மார்ச் 18 & 19 2017 குக்கூ காட்டுப்பள்ளி             நாங்கள் எங்கள் ந...