Wednesday, 5 October 2016

நாகலாபுரம் - ஒரு இயற்கை சார்ந்த குழு பயணம். TCS NSC Office trip 14th Aug 2016

 எங்கள் அலுவலக குழுவினரின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு இயற்கை சார்ந்த பயணத்தை திட்டமிட்டுக்கொண்டு இருந்தேன். அனைவரும் மிகவும் சுலபமாக சென்று வரும் ஒரு இடத்தை தேர்வு செய்ய சிந்தித்து கொண்டிருந்த பொழுது என் நினைவில் வந்தது இந்த சொர்க்கபூமி நாகலாபுரம் வடக்கு பகுதிதான் . நான் நகலாபுரத்திற்கு  அதிக முறை சென்றிருக்கிறேன். அந்த இடத்தை என் அலுவலக குழுவிற்கும்  காட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த பயணத்தை உறுதிசெய்தேன் .

எங்கள் குழுவுடன் பேசி ஆகத்து மாதம் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை எங்கள் பயணத்தை உறுதி செய்தோம்

எங்கள் குழுவில் 11 பேர் பக்கத்து குழுவில் 2 பேர், என் நண்பன் ஒருவன்  மொத்தம் 14 பேர் வருவதாக உறுதி கொடுத்திருந்தனர். பயண செலவு மற்றும் சாப்பாடு செலவு ஆகியவற்றை சமமாக பகிர்ந்துகொள்வது than  எங்கள்-in திட்டம் .

1.பாலாஜி , 2.செல்வமுத்து குமார், 3.சரண், 4.சரண்யன், 5.அசோக், 6.விஜய், 7.தாவூத், 8.உதய், 9.வாஹனன், 10.ஜித், 11, மணி, 12. பீட்டர், 13.ராகேஷ், 14.சபரீஷ்

இந்த குழுவில் எனக்கும் (பாலாஜி) செல்வா மற்றும் தாவூத் ஆகியவர்களுக்கு மட்டுமே நீச்சல் தெரிந்திருந்த காரணத்தால் டியூப்கள் வாங்கவும் முடிவெடுத்தோம்.

சாப்பிடும் பொருட்கள்-lai வாங்கி வருவதை எங்கள் குழு மேலாளர் சரண் மற்றும் சில நண்பர்கள் ஏற்றுக்கொண்டனர் .

சரண் - வாழைப்பழம் , சப்பாத்தி மற்றும்  பிஸ்கட்,
சரண்யன் - கொய்யா பழம் ,
விஜய்  - பண் பட்டர் ஜாம் ,
தாவூத்காராபூந்தி.
பாலாஜி - மிதப்பத்திற்கு டியூபிகள் 4.

சரண் , மணி மற்றும் விஜய் ஆகிய மூவரும் தங்களுடைய கார்களை இந்த பயணத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.திட்டமிடப்பட்டபடி அனைவரும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கார்களில் ஏறி 6 மணி அளவில் ஆவடி ரயில்நிலையம் வந்தடைந்தனர். மற்ற சில பேர் அங்கு வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டனர் .

அங்கேயே தேனீர், மற்றும் வடை சாப்பிட்டுவிட்டு அனைவரும் நாகலாபுரம் நோக்கி கிளம்பினோம்.

நாங்கள் திருவள்ளூர் , ஊத்துக்கோட்டை மார்கமாக செல்லும் வழியை தேர்வு செய்திருந்தோம். ஊத்துக்கோட்டைக்கும் முன்னதாகவே ஒரு கிராமத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம்


 ஊத்துக்கோட்டையில் ஒரு உணவகத்தில் காலை உணவை முடித்துவிட்டு சிற்றுண்டிகளையும் வாங்கிக்கொண்டு நாகலாபுரம் நோக்கி நகர ஆரம்பித்தோம்.

நாகலாபுரம் சென்று சேரும்பொழுது மணி காலை 10ஐ நெருங்கி இருந்தது. அனைவரும் காலம் தாமதிக்காமல் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு நாகலாபுரம் அணைக்கட்டு மீது ஏறி நடக்க ஆரம்பித்தோம்


அசோக் அண்ணா சற்றும் சலிக்காமல் அனைவரிடமும் பேசிக்கொண்டும், கலாய்த்துகொண்டும் என்னை இடையிடையே திட்டிக்கொண்டும் தொடர்ந்து முன்னேறி வந்து கொண்டே இருந்தார்.

சற்று தூரம் காட்டிற்குள் சென்றதும் சூரிய வெப்பம் தணிந்து குளுகுளு காற்று வீசத்தொடங்கியது . அனைவரும் அந்த காற்றை அனுபவித்தபடியே  நடந்து கொண்டிருந்தனர்.

செல்லும் வழிகளில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.


அரைமணி நேரம்  நடந்ததும் ஒரு நீரோடை எங்கள் கண்ணில் தென்பட அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

அங்கயே சிறிது நேரம் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

நம்ம பசங்க சும்மாவே போட்டோ எடுத்து கலக்குவாங்க.  இப்போ அழகான நீரோடை வேறு இருக்கிறது சும்மாவா விடுவாங்க. சும்மா வளச்சு வளச்சு ஒரே போட்டோதான்.


அப்புறம் நடக்க ஆரம்பித்தோம் காட்டிற்குள் நான் முன் நடக்க அனைவரும் என்னை பின்தொடர்ந்து வந்தனர் .


செல்லும் வழியெங்கும் தென்படும் நீரோடைகளில் குளித்துக்கொண்டும், மலை அருவியின் நீரை குடித்துக்கொண்டும் பயணத்தை தொடர்ந்தோம்.

முதல் குளத்தை அடையும்போது மணி 11.30 Am . நான் முன்னரே வாங்கி வந்த டியூபிகளை ஊத ஆரம்பித்தோம்.


நண்பர்கள் டியூப்களில்  காற்று ஊத  நான் குளத்தில் இறங்கி ஆழம் பார்த்துவிட்டு நண்பர்களை அழைத்தேன். அனைவரும் குளத்தின்  ஆழமில்லா  பகுதியில் நின்று னந்த குளியல் போட்டுக்கொண்டு இருந்தனர்.

நான் ஒவ்வொருவராக டியூபிகளை மாட்டிவிட்டு குளத்தின் மறுமுனையில் இருந்த அருவிக்கு இழுத்து சென்றேன். முதலில் பயப்பட்ட அனைவரும் ஒருமுறை உள்ளே சென்று வந்ததும் பயம் தெளிந்தவர்களாய் அவர்களே குளத்தின் ஆழமான பகுதிக்கு டியூப்களின் உதவியுடன் சென்றுவர ஆரம்பித்தனர்.


ஒவ்வொருவராக அருவியின் மீதேறி அமர்ந்து சிறிதுநேரம் ரசித்துவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.


எனது மற்றும் என் நண்பனின் முழு கவனமும் மற்ற 12 பேரை கண்கணிப்பதிலேயே இருந்தது. தப்பி தவறி கூட எந்த வித அசம்பாவிதமும் நிகழுத்துவிட கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.

அசோக் அண்ணா பாட்டுபாடிக்கொண்டே குளித்துக்கொண்டிருந்தார்.

" நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன் "


மற்றவர்களும் அசோக்குடன் சேர்ந்து பட ஆரம்பித்துவிட்டனர். அனைவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தனர் . எனக்கும் மகிழ்ச்சி.

ஒருமணி நேரம் அங்கு குளித்து முடித்தவுடன் சிறிது சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு இரண்டாம் -குளத்தை  நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

முதல் குளத்திற்கு மேலே இரு பாறைகளுக்கு இடையே  உள்ள குறுகலான வழியில் அனைவரும் மேலேற சிரமப்படுவார்கள் என்று நினைதேன். ஆனால்  எனக்கு மிகப்பிரிய ஆச்சரியம்.


 ஒருவர்கூட சிரமப்படாமல் சுலபமாக அந்த வழியை கடந்து அடுத்த 20நிமிடத்தில் இரண்டாம் குளத்தை அடைந்தோம்.2-வது குளம் முதல் குலத்தைவிட சற்று பெரியது. பெரும் பகுதி ஆழம் குறைவாகவே  இருக்கும். மேலும் முதல் குளத்தை விட  இந்த குளத்தில் சுற்றிலும் பச்சை பசேலென மிகவும் அழகாக காட்சியளித்தது.


 வழக்கம் போல நான் முதலில் இறங்கி ஆழத்தை உறுதிசெய்து கொண்டு பின்னர் அனைவரையும் உள்ளே இறங்கச்செய்தென்.

இங்கும் குளத்தின் மறுமுனையில் இருந்த அருவியின் அருகில் சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம் .இடையிடையே கொய்யா பழம் சாப்பிட்டுக்கொண்டும் குழுவுடன் நீரில் விளையாடிக்கொண்டும் மிகவும் மகிழ்ச்சியாக பொழுதை களித்தோம்.

மதியம் 2 மணி அளவில் நான் 3-வது குளம் செல்லலாம் என்று கூறியதற்கு அனைவரும் களைப்பு மிகுதியின் காரணமாக மறுத்துவிட்டனர்.


மூன்றாவது குளம் மிகவும் அருமையாக இருக்கும். கிணறுவடிவிலான இந்த குளத்தின் ஒரு மூலையில் வெள்ளை அருவி கொட்டிக்கொண்டே இருக்கும். 40 அடி ஆழத்தில் உள்ள கற்கள் நன்றாக தெரியும் . நன்றாக ஆசை தீர  குதித்து குளிக்க மிகவும் பொருத்தமான இடம் இதுவே.
இருந்தும் என்னால் நேரமின்மையின் காரணமாக இங்கு இந்த முறை செல்ல முடியவில்லை.


குளித்து முடித்ததும் கொண்டுவந்த சிற்றுண்டிகளை சாப்பிட்டு முடித்துவிட்டு , டியூபிகளில் உள்ள காற்றை இறக்கிவிட்டு மெதுவாக திரும்பி நடக்க ஆரம்பித்தோம்.

மாலை 4.30 மணியளவில் அனைவரும் எங்கள் வாகனத்தை அடைந்தோம். பிறகு உடை மாற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானோம்.

சென்னை நோக்கி செல்லும் வழியில் ஒரு இடத்தில நிறுத்தி இளநீர் , தேநீர் ஆகியவை குடித்தோம். போண்டா சாப்பிட்டோம், பிறகு எங்கள் பயணம் சென்னையை நோக்கி கிளம்பியது.

 உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

என்றென்றும் அன்புடன்,
                                                                                                            பாலாஜி ஜோதிமணி
                                                                                                                         Mobile: +91-9677549415
                                                                                                                   Email: jbalajiavm@gmail.com
                                                                                                Facebook: www.facebook.com/jbalajiavmNo comments:

Post a Comment

Thanks for your comments.

CTC ஐந்திணை - குக்கூ   காட்டுப்பள்ளி   ஒரு பயணம் மார்ச் 18 & 19 2017 குக்கூ காட்டுப்பள்ளி             நாங்கள் எங்கள் ந...