Thursday, 8 March 2018


CTC ஐந்திணை - குக்கூ  காட்டுப்பள்ளி  ஒரு பயணம் மார்ச் 18 & 19 2017

குக்கூ காட்டுப்பள்ளி

            நாங்கள் எங்கள் நீண்ட கால செயலினூடாக சென்று சேர விரும்பிய நிலம் செம்மண்ணோடு ஜவ்வாது மலை அடிவாரத்தில் தாவரங்கள் முளைத்து பூமி மீது படர்ந்திருக்கிறது. சமூகத்திற்கு வெளியேயும், கானகத்திற்கு உள்ளேயும் அழகாய் ஆங்காங்கே  சிறு சிறு  குடில்களாக  அமைந்திருக்கிறது குக்கூ காட்டுப்பள்ளி.

 

Jothi Photos



 

கல்வி நல்சூழல் பறிக்கப்பட்ட குழந்தைகளின் அதிகாலையாகவும், மறக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட முதியவர்களுக்கான ஓய்விடமாகவும், தாலாட்டும் அந்தியாகவும் இந்நிலம் இருக்கிறது. அங்கே குழந்தைகள் களங்கமற்ற குதூகலத்தையும், முதியவர்கள் தங்கள் வாழ்வனுபவ ஞானத்தின் எல்லையின்மைகளை விரல் கோர்த்துக்கொள்ளலாம்...
இயற்கைக்கு விரோதமற்ற நிஜமான மனித தேவைகளுக்கான, மரபான தொழில்நுட்பங்கள், இயற்கை வழி நிரந்தர வேளாண்மை, காலத்திலிருந்து விடுபட்டு பன்முக பருவங்களின் வியாபித்தல்களை உணர்தல், இயற்கையை, சமூகத்தை, வாழ்வை கவனித்து கற்றல் மூலம் யாவர் காலடியில் இருந்தும் விழிப்புணர்வின் பாதை தோன்றும். சொல், எழுத்து, பொருள், தொழில் முழுமை ஆக்கம் இவை யாவும் கற்று இயற்கையில் தெளிதல் அதற்கான சிறு தொட்டில்தான் அந் நிலம்...
 இந்த பள்ளியின் கட்டுமானத்தில் எங்கள் பங்களிப்பை அளிப்பதற்கு நாங்கள் மேற்கொண்ட பயணமே இந்த பயண கட்டுரை.
 என் பிறந்த நாளில் இந்த மாதிரி ஒரு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்ததை என்னி மகிழ்ச்சியும் , பெருமிதமும் கொள்கிறேன்.

 

பயண தொடக்கம்

திட்டமிட்டபடி 22 பேர் கொண்ட எங்கள் குழு 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் சென்னையில் இருந்து முன்பதிவு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் கிளம்பியது.
அனைவரும் அவரவர் சந்திப்பு இடத்தில ஒன்றுகூடி வாகனத்திற்கு காத்திருந்தோம் , நண்பன் விக்னேஷ் அவரது தாயாருடன் வந்திருந்தார், தினேஷ் அவரது மனைவியுடன் வந்திருந்தார்.
மேனேஜர் சிவா எங்களை எல்லாம் சரியான நேரத்திற்கு வரசொல்லிவிட்டு அவர் 1 மணிநேரம் தாமதமாக வந்த காரணத்தால் கிளம்ப சற்று தாமதம் ஆனது.



வண்டி கிளம்பியதும் அனைவரும் சிவாவை எவ்வளவு திட்ட வேண்டுமோ அவ்வளவு திட்டித்தீர்த்துவிட்டனர்.
பின்னர் அவரவர் கொண்டுவந்திருந்த சிற்றுண்டிகளை பரிமாறிக்கொண்டனர் .

வாகனம் சென்னையை விட்டு வெளியே சென்றதும் ஒரு பேய்ப்படம் போட்டார்கள். அதுவரை எனது அருகில் அமர்ந்து  லாப லாப என்று பேசிக்கொண்டு இருந்த கார்த்திகா சற்றே பீதி கலந்த அமைதியானார். கரணம் பேய்ப்படம். கார்த்திகாவின் வீக்னஸ் தெரிந்த பிறகு நம்ம பசங்க சும்மாவா விடுவாங்க. வச்சி செஞ்சி விட்டுட்டாங்க.

இரவு 10.30 மணியளவில் வேலூரில் இரவு உணவிற்க்காக வாகனம் நின்றது. ஒருகுழு அசைவ உணவகத்திருக்கும் மற்றொரு குழு சைவ உணவகத்திருக்கும் சென்றோம். நங்கள் சென்ற அசைவ உணவகத்தில் துவுமே இல்லை, ஏமாற்றத்துடன் மறுபடியும் நங்கள் சைவ உணவகத்திற்க்கே வந்து முன்சென்ற குழுவுடன் சேர்ந்துகொண்டோம். கோரிய உணவுகள் வரவர அனைவரும் பங்குபோட்டு ஒரே தட்டில் ஒருவழியாக சாப்பிட்டு முடித்துவிட்டு மறுபடியும் குக்கூ பள்ளி நோக்கி பயணக்க தொடங்கினோம் . இரவு 1.30 மணி அளவில் எங்கள் வாகனம் குக்கு பள்ளியை அடைந்தது.

நாங்கள் பள்ளியின் வாயிலை நெருக்கும் முன்பே அந்த  பள்ளியின் காவலர்கள் (நாய்கள்) ட்விங்கிள் , ஜோடான் , ஜாக் மற்றும் பாக்சி எங்களை ஓடிவந்து அன்போடு வரவேற்றன. எங்கள் குழுவில் 20 பேரும்  முதன்முறையாக இங்கு வருகிறோம் , ஆனாலும் அந்த ஜீவன்கள் எங்களை கண்டு குறைக்கவோ.  கடிக்கவோ நினைக்கவில்லை. எங்கள் ஒவ்வொருவரின் அருகில் வந்து எங்கள் மீது அதன் முனகிக்கால்களை வைத்து மகிழ்ச்சியுடன் வரவேற்றன.

பள்ளியினுள் சென்றயுடனே எங்களுக்கு இரவு தூங்க பள்ளியின் நூலகம் தரப்பட்டது. நங்கள் அனைவரும் நன்கு உறங்கி அதிகாலையில் எழுந்தோம் .


நாள் ஒன்று - வேலைகள் 18 மார்ச் , 2017

தூக்கம் மலர்ந்து நினைவுகளில் அதிகாலைக் குளிர் படரும் தருணத்தில் காதில் விழும் குயிலின் கூவல், உலர்ந்த உணர்வில் மழை தெளித்து, மனதில் ஏக்கத்தின் வாசனை கிளப்பும். கைகள் தேய்த்து கண்களில் பொத்தி மொத்தமாக விழிக்கையில் நரம்புகள் சோம்பல் முறிக்கும். வெற்றுக் காலில் நடக்க நடக்க மண்ணும் சிறு கற்களும் உதிர் இலைகளும் உள்ளங்காலில் கிறுக்கும் அழகு! ஹைய்யோ... நினைத்தாலே ஜில்லென இருக்கிறது.
காலையில் பள்ளியில் இருந்த பட்டியம்மா எங்களுக்கு கருப்பட்டி மூலிகை தேனீர் வைத்து கொடுத்தாதிர்கள்.


பிறகு பள்ளியின் எதிரில் இருக்கும் ஒரு பெரிய புளிய மரத்தின் அடியில் அனைவரையும் கூட்டி அமரவைத்து சிவராஜ் அண்ணா அவர்கள் இந்த பள்ளியையும் அவர்கள் பின்பற்றும் பழக்க வழக்கங்களையும்  எங்களுக்கு புரியும்படி கூறினார். அருகில் இருக்கும் மலை கிராமங்கள் பற்றியும் கூறினார்.



பிறகு நங்கள் எங்கள் பணிகளை தொடர ஆரம்பித்தோம் . மழை நீர் செல்வதற்கு தோண்டப்பட்ட கால்வாய்களின் விளிம்பில் அங்கு கிடந்த பாறைகளை ஒரே சீராக 
அடிக்கினோம்.





அந்த வேலை முடிந்தாயுடன் காலை உணவிற்காக கேழ்வரகு கூழ் மற்றும் மங்கை ஊறுகாய் தயார் செய்யப்பட்டு இருந்தது.



காலை உணவை ஒரு பிடி பிடித்துவிட்டு அங்கு நடப்பட்டு இருந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தோம்.

நாங்கள் தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருக்கும் வேளையில் வினோத் எங்களுக்கான மத்திய உணவு சமைக்க தேவையான பொருட்களை அருகில் இருந்த கிராமத்தில் இருந்து வாங்கி வந்துவிட்டார்.

மத்திய உணவை தயாரிப்பதில் ஒருகுழு பட்டியம்மாவிற்கு உதவிகொண்டு இருந்தது. விக்னேஷ் அம்மா, லதா, தீபிகா மற்றும் மாலதி ஆகியோர் காய்கறி அரிந்து கொடுத்துக்கொண்டு இருந்தனர் . மத்திய உணவு சற்றே நேரம் ஆனதால் அனைவரும் கடும் பசியில் இருந்தோம்.


அந்த நேரத்தில் பலா கொட்டைகளை அடுப்பினுள் போட்டு வேகவைத்து எடுத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம். அந்த பலா கொட்டைகளுக்கு எனக்கு உனக்கு என்று சண்டைகள் வேறு . 2 மணியளவில் காய்கறி பிரியாணியை வெளுத்து வாங்கினோம்.

மதிய உணவிற்கு பிறகு சிறிதுநேரம் அனைவரும் ஓய்வடுக்க நல்ல நிழலான இடம் தேடி அமர்ந்தனர். நான்  ஒரு குழுவோடு அருகில் இருந்த மாந்தோப்பில் மாமர நிழலில் மிகவும் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டு இருந்தோம். திரும்பி வரும்போது புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம் .



மலை அனைவரும் ஓய்வு நேரம் முடிந்து ஒன்றுகூடவும் பட்டியம்மா எங்களுக்கு கருப்பட்டி காபி கொடுக்கவும் சரியாக இருந்தது. காபி குடித்து முடித்ததும் நங்கள் கிட்டி புள் விளையாட்டு விளையாட ஆரம்பித்தோம்.

வெகு நாட்கள் கழித்து மிகவும் மகிழ்ச்சியாகவும் முழுநிறைவு அடைந்ததாகவும் உணர்ந்தேன். ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருந்தது. இதில் ஹைலைட் என்னவென்றால் ஆட்டத்தின் இடை இடையே நாங்கள் செய்த சிறுசிறு ஏமாற்று வேலைகளும் அதற்க்காக போட்ட
சண்டைகளும் தான் . சிவா அணி 116 புள்ளிகளையும் , விக்னேஷ் (எங்களை  )அணி  906 புள்ளிகளையும் பெற்று எங்கள் அணி வெற்றிபெற்றது. இருப்பினும் எதிரணி சற்றும் கூச்சப்படாமல் வெற்றி வெற்றி எங்களுக்கு வெற்றி என்று மைதானத்தை ரயில் வண்டி போல ஒரு   சுற்று சுற்றி வந்தனர். என்ன ஒரு மகிழ்ச்சி. காசு பணம் கொடுத்தாலும் கிடைக்காத மகிழ்ச்சி .

விளையாட்டு முடிந்தவுடன்  மறுபடியும் அடுத்த வேலையை துவங்கினோம். கபடி விளையாட்டிற்க்காக சமன்படுத்தப்பட்ட மைதானத்தில் இருந்த கற்களை அதன் அளவு வாரியாக பிரிப்பதுதான் எங்கள் வேலை. வேலை மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. விக்கி சிவாவை சீண்ட, சிவா மண் எடுத்து விக்கி மீது போட ஆரம்பித்தது ஆட்டம்.




தண்ணீர் குறைவாக இருந்த காரணத்தால் குளிக்க இயலாது எண்டு கூறி இருந்தார்கள். அதனால் நங்கள் அமைதியாக இருந்தோம் எந்த குரங்கு சேட்டையும் செய்யாமல் .

நங்கள் கல்பொருக்க ஆரம்பிக்கவும் மழை பொழிய துவங்கியது. சரி குளிக்க வழி கிடைத்துவிட்டது என்று அனைவரையும் போட்டு மண்ணில் உருட்டி எடுத்துவிட்டோம். நன்றாக மண்ணில் விளையாடி முடித்ததும் மழை நகர்ந்து சென்று எங்களை முட்டாள்கள் ஆக்கிவிட்டது.

பிறகு கிணத்தடியில் சென்று ஆளுக்கு ஒரு வாலி தண்ணீர் என்று ஒருவழியாக குளித்துவிட்டு வந்தோம்.

அதற்குள் இரவு உணவிற்க்காக பொருட்களும் , ஒரு பலாப்பழமும் வாங்கிவரப்பட்டது. இரவு உணவு உப்புமா விக்னேஷ் அம்மா மற்றும் ஸ்ரீதரன் அய்யா அவர்கள் தரித்துக்கொண்டிருக்க சிவா மற்றும் விக்கி பலாப்பழம் உரிக்க ஆரம்பித்தனர். அரைப்பாலம் உரித்து அனைவரும் பங்கிட்டு உண்டுமுடித்தோம்.

பிறகு சுட சுட உப்புமா உண்டுமுடித்தோம். அதன் பின்னர் சிறிதுநேரம் ராஜா ராணி விளையாட்டு விளையாடி கொண்டு இருந்தோம்.

பிறகு இரவு 12 மணியளவில் நாங்கள் அனைவரும் சந்திப்பு அறையில் அமர்ந்துகொண்டு என்னால் கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம். சிவராஜ் அண்ணா அவர்கள் இந்த பள்ளி உருவான  விதம் , கடந்துவந்த பாதைகள் , இன்ப துன்பங்கள் அனைத்தையும் எங்களுடன் பகிர்ந்துகொண்டார். எங்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டது . பிறகு இரவு 1.30 மணி அளவில் தூங்க சென்றுவிட்டோம்.

நாள் இரண்டு - வேலைகள் 19 மார்ச் , 2017
மறுநாள் ஞயாயிரு காலை எழுந்து கருப்பட்டி காபி குடித்துவிட்டு வழக்கம்போல வேலை செய்ய தொடங்கினோம். வேலை நடைபெறும் கூடத்தை சுற்றி உள்ள உபயோகமற்ற மரச்சாமான்களை எடுத்து பாதுகாப்பான இடத்தில மாற்றி வைத்துக்கொண்டு இருந்தோம்.
இப்பொழுது காலை உணவு, மறுபடியும் கேழ்வரகு கூழ் , முழங்கி தொக்கு, மற்றும் வதக்கிய சின்ன வெங்காயம் . அட அட அட என்ன ஒரு உணவு.....


பிறகு அந்த கூடத்தின் ஓடு மாற்றும் வேளையில் பழைய ஓடுகளை கீழே இறக்கவும் , புது ஓடுகளை மேலே ஏற்றி கொடுக்கவும் உதவி செய்துகொண்டு இருந்தோம்.



நல்ல உச்சி வெயில் என்றுகூட பாராமல் வேலை செய்துகொண்டு இருந்தோம். அந்த நேரத்தில் குச்சி ஐஸ் விற்கும் ஒரு பெரியவர் அங்கு வரவே நாங்கள் அனைவரும் ஓடிச்சென்று ஐஸ் வாங்கி சாப்பிட்டோம். மிக்க மகிழ்ச்சி.....



வேலை முடிந்த பிறகு காட்டிற்குள் ஓர் சிறிய பணம் சென்றுவந்தோம். காட்டிற்குள் மிகவும் குளுமையாக இருந்தது, சிறிதுநேரம் ஆற்றுமணலில் அமர்ந்துவிட்டு விதைகள் மற்றும் சருகுகள் சேகரித்தோம். பிறகு ஒரு குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். எங்கள் குடிலை அடையும்போது ஆண்டு சாமபார் சாதம் மற்றும் தயிர் சாதம் தயாராக இருந்தது.



மத்திய உணவை முடித்துக்கொண்டு நங்கள் வந்து செல்வதற்கான கணக்கை சரிபார்த்துக்கொண்டு கிளம்ப தயாரானோம்.  நாங்கள் எங்களால் முடிந்த ஒரு சிறு தொகையை பள்ளி பணிக்காக கொடுத்தோம். சிவராஜ் அண்ணா அனைவருக்கும் ஒரு தும்பி புத்தகம் ஒன்றை பரிசளித்தார். அதன் பின்னர் அனைவரையும் அழைத்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு பிரிய விடைபெற்று கிளம்பினோம்.



எங்கள் வாகனம் சென்னை நோக்கி முன்னகர, எங்கள் மனம் மட்டும் பின்னோக்கி அந்த குக்கூ பள்ளியை நோக்கி நகர்ந்துகொண்டு இருந்தது.
திரும்பி வரும் வழியில் காஞ்சிபுரம் அருகில் ஒரு உணவகத்தில் இரவு 8மணிக்கு  உணவு உண்பதற்காக வண்டி நின்றது. அன்று எனக்கு பிறந்த நாள் என்பதை விக்னேஷ் அனைவரிடமும் கூற அனைவரும் பர்த்டே பம்ப்ஸ் என்ற பெயரில் செம உதை உதைத்தனர் . விக்னேஷ் அம்மா என்னை ஒருவழியாக அதிக உதைகளில்  இருந்து காப்பாத்தினார்கள்.

பிறகு நாங்கள் கிண்டியை அடையும்போது இரவு 10.10. அங்கிருந்து நான் தொடர்வண்டியில் என் வீடு போய் சேர்ந்தேன். 

https://www.dropbox.com/sh/kx55xoyjbwxq5a2/AAC63i1zs3FLPtYRHufYRO3fa/101CANON?dl=0

https://www.facebook.com/jbalajiavm/media_set?set=a.1293992770636603&type=3

https://photos.google.com/share/AF1QipPB_O9M40QdA-obKTYRwkiebD7iN5765nmYz3mFocxn8XbDd1_l50ZKw4nx0aVHvA?key=bDlXR3NCN0pwOTFrMnFEUV9FX21vd2Y3UHdHM3FR


https://photos.google.com/share/AF1QipMjdEVTk39JEml0b4IOZi2j2JjpYFg9pkx2fg2QSS2JMq-pbGLpAkSQEJYbqrAUVw?key=WDJJa3VndDJMRnpoZV9jdXFQMGtRWUdIM0Y2Z0x3



குக்கூ பற்றி மேலும் அறிந்து கொள்ள :
CUCKOO MOVEMENT FOR CHILDREN,
25/ Mandhoppu, Pa Vu Sha Nagar,
Polour Road, Tiruvannamalai - 606 601
Tamilnadu, India.
cuckoochildren@gmail.com
facebook.com/cuckoochildren
9443105633 - 9965689020 - 9442593448 - 9942118080 





No comments:

Post a Comment

Thanks for your comments.

CTC ஐந்திணை - குக்கூ   காட்டுப்பள்ளி   ஒரு பயணம் மார்ச் 18 & 19 2017 குக்கூ காட்டுப்பள்ளி             நாங்கள் எங்கள் ந...